இட்டமொழி

ஆள்கூறுகள்: 8°23′36.15″N 77°50′45.69″E / 8.3933750°N 77.8460250°E / 8.3933750; 77.8460250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டமொழி
கிராமம்
இட்டமொழி is located in தமிழ் நாடு
இட்டமொழி
இட்டமொழி
இட்டமொழி is located in இந்தியா
இட்டமொழி
இட்டமொழி
ஆள்கூறுகள்: 8°23′36.15″N 77°50′45.69″E / 8.3933750°N 77.8460250°E / 8.3933750; 77.8460250
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
வட்டம்நாங்குநேரி
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்627652
தொலைபேசி குறியீடு91-(0)4637

இட்டமொழி (Ittamozhi) என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இவ்வூர் நாங்குநேரி வட்டத்திற்கு உட்பட்டதாகும்.[1]

மக்கள்[தொகு]

இட்டமொழி கிராமத்தில் 2056க்கும் அதிகமான குடும்பத்தினர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்து நகரங்களில் வசிக்கின்றனர்.[2] இட்டமொழியில் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆண்கள் 3964, பெண்கள் 4154 என மொத்தம் 8118 பேர் வசிக்கின்றனர்.[3]

மக்கள் வகைபாடு[தொகு]

இவ்வூரில் இந்து மற்றும் கிறித்துவ மதத்தினைப் பின்பற்றும் மக்கள் வசித்து வருகின்றனர்.[2]

சுற்றுச்சூழல்[தொகு]

இட்டமொழி வறண்ட நிலப்பகுதியாகும். வருடத்தின் பெரும்பாலான நாட்களில் உலர்ந்த காலநிலையைக் கொண்டிருக்கிறது. இப்பகுதியில் பொதுவாக புளிய மரங்கள், பனை மரங்கள் மற்றும் அகாசியா நீலோட்டா மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவ்வூரைச் சுற்றி அய்யன் குளம், ஊரணி குளம், வெலன்காடு குளம் ஆகியன உள்ளன.[4]

வசதிகள்[தொகு]

அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு நூலகம், அஞ்சல் அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம், தமிழ்நாடு கிராம வங்கி, முதன்மை வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட சேவை வசதிகள் இங்கு அமைந்துள்ளன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Director of Census Operations, Tamil Nadu; K. Chockalingam (1972). District Census Handbook: Series 19: Tamil Nadu: Tirunelveli. https://books.google.com/books?id=Qvs_AAAAMAAJ. 
  2. 2.0 2.1 India. Director of Census Operations, Tamil Nadu (1983). Total Population and Population of Scheduled Castes and Scheduled Tribes in Panchayats and Panchayat Unions [in Tamil Nadu].: Tirunelveli. Government of Tamil Nadu. https://books.google.com/books?id=QbkUAQAAMAAJ. 
  3. "Ittamozhi Village Population - Nanguneri - Tirunelveli, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-05.
  4. Dervla Murphy (11 December 1989). On a Shoestring to Coorg: A Travel Memoir of India. Overlook. பக். 95–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4683-0573-9. https://books.google.com/books?id=tYNFAAAAQBAJ&pg=PT95. 
  5. "Tirunelveli district to get three more PACBs".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டமொழி&oldid=3617810" இலிருந்து மீள்விக்கப்பட்டது