இடை வீட்டு அய்யனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
EIDAI VEETU AYYANAR KOVIL.jpg

இடை வீட்டு அய்யனார் கோவில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் கோவிலாகும். தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 7 கிமீ. தொலைவிலுள்ள சோனகன்விளை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 

மூலவர் இடைவீட்டான், இடை வீட்டு அய்யனார், பச்சைத்தண்ணிகாரன் என வேறு பெயர்களிலும் வழங்கப்படுகிறது. இவர் அமர்ந்த நிலையில் பூர்ணம், பொற்கமலம் தேவியருடன் உள்ளார்.

இடை வீட்டு  அய்யனார் கோவில்

இந்தக் கோவில் 400 முதல் 450 ஆண்டுகள் பழமை நிறைந்தது. சோனகன்விளை  கிராமத்தில் .இடை வீட்டு அய்யனார் அழைக்கப்படும் இவர் சிவன் மற்றும் விஷ்ணுவின் மானிட வடிவாக பார்க்கப்படுகிறார். இக்கோவிலில் பௌர்ணமி பூசை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் நடைபெருகின்றன.

இத்தலம் காவல் தெய்வமாக இருக்ககூடிய சுடலை மாடனின் 21 பந்திகளில் ஒரு பூடமாக இருந்தது.

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடை_வீட்டு_அய்யனார்&oldid=2638480" இருந்து மீள்விக்கப்பட்டது