இடைநிலை ஆசிரியர் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டிலுள்ள ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளில் இரண்டு ஆண்டு கால அளவிலான இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் அதிக அளவில் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் இடைநிலை ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர். உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.