இடைக்கழி நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான செய்யூர் தொகுதியில் இடைக்கழிநாடு என்னும் பேரூராட்சி உள்ளது.[1]

பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டு நூல்களுக்கும் நச்சினார்க்கினியர் இயற்றிய உரை ஒன்று உள்ளது. இதனை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்துள்ளார். [2] இந்த ஆராய்ச்சிக் குறிப்பில் சென்னைக்குத் தென்மேற்கில் இடைக்கழிநாடு என்னும் ஊர் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். [3] இவ்வூர்ப் பகுதியிலுள்ள கல்வெட்டுகளும் இதனை இடைக்கழிநாடு என்று குறிப்பிடுகின்றன.[4] சங்ககாலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த இந்த ஊரின் பெயரால் அதனைச் சூழ்ந்திருந்த ஊர்கள் இடைக்கழிநாடு என்னும் அமைப்பின் கீழ் இருந்தன.[5] இந்த நாட்டில் நல்லூர் என்னும் ஊர் இருந்தது. செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் நல்லூர் என்னும் ஊர் உள்ளது.

இந்த ஊரில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் நத்தத்தனார். இவர் இப்பகுதியை அடுத்திருந்த ஓய்மானாட்டு நன்மாவிலங்கை வள்ளல் நல்லியக்கோடனைப் பாடியுள்ளார். பாடல் சிறுபாணாற்றுப்படை எனப் பெயர் பெற்றுள்ளது. புலவர் இந்த வள்ளலைக் காணச் சென்றபோது எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் [6] என்னும் ஊர்களைக் கடந்து சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

ஓய்மான் நல்லியாதன், ஓய்மான் வில்லியாதன் என்னும் அரசர்களும் இந்நாட்டை ஆண்ட சங்ககால அரசவள்ளல்கள். ஓய்மான் அரசர்கள் ஆண்டதால் இதனை 'ஓய்மானாடு' எனவும் வழங்கினர்.

சான்று[தொகு]

  1. இடைக்கழி நாடு
  2. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், இணையப் பதிப்பு
  3. பக்கம் 691
  4. டாகடர் மா இராசமாடிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, 1970. முகவுரை பக்கம் 12.
  5. இடைக்கழிநாடு
  6. இந்த ஆமூர் இக்காலத்தில் சித்தாமூர் என்னும் பெயருடன் விளங்குகிறது. [[கிடங்கில் இக்காலத்தில் திண்டிவனம் என்னும் பெயருடன் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்கழி_நாடு&oldid=2565969" இருந்து மீள்விக்கப்பட்டது