உள்ளடக்கத்துக்குச் செல்

இடும்பி தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடும்பி தேவி கோயில்
இடும்பி தேவி கோயில் is located in இமாச்சலப் பிரதேசம்
இடும்பி தேவி கோயில்
இந்தியாவில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்:குலு
ஆள்கூறுகள்:32°14′32″N 77°11′15″E / 32.24228°N 77.187366°E / 32.24228; 77.187366
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பகோடா

இடும்பி தேவி கோயில் (Hidimba Devi Temple) உள்ளூரில் துங்கரி கோயில் என்றும்,இடும்பி கோயில் என்றும் அடிம்பா கோயில் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும்.[1] இது வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான மணாலியில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும். இது இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் வீமன்இன் மனைவியான இடும்பி தேவி க்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான குகைக் கோயிலாகும். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில், துங்கரி வன் விகார் எனப்படும் தேவதாரு மரக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இக்கோயிலின் கருவறை, தரையிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. இப்பாறையை அப்பகுதியினர் தெய்வத்தின் வடிவமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயில் கட்டமைப்பு 1553-ஆம் ஆண்டில் மகாராஜா பகதூர் சிங்கால் கட்டப்பட்டது.[2]

இடும்பி தேவி கோயில் 24 மீட்டர் உயரமானது.

வரலாறு

[தொகு]

இடும்பி தேவி கோயில் கி.பி. 1553-ஆம் ஆண்டில் மகாராஜா பகதூர் சிங்கால் கட்டப்பட்டது.[3] இடும்பி தேவி தவம் செய்த குகையைச் சுற்றி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இடும்பி தனது சகோதரரான இடும்பன் உடன் அங்கு வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது பெற்றோரைப் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை. ஒரு அசுரக் குடும்பத்தில் பிறந்த இடும்பி, மிகுந்த வீரமும் அச்சமின்மையும் கொண்ட தனது சகோதரன் இடும்பனைத் தோற்கடிப்பவரையே திருமணம் செய்துகொள்வதாக உறுதி பூண்டிருந்தார். பாண்டவர்கள் வனவாசத்தின் போது மணாலிக்குச் சென்றிருந்தபோது, ​​பாண்டவர்களில் ஒருவரான வீமன் இடும்பனைத் தோற்கடித்தார். அதன் பிறகு, இடும்பி வீமனைத் திருமணம் செய்துகொண்டாள். இவர்களுக்கு மகனாகக் கடோற்கஜன் பிறந்தான்.

இடும்பி தேவி வழிபாடு

[தொகு]

மணாலியில் இடும்பி தேவிக்கு அளிக்கப்படும் வழிபாடு குறிப்பிடத்தக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு இவர் ஒரு தெய்வமாகப் போற்றப்படுகிறார். பொதுவாக நவராத்திரி காலத்தில் துர்கா தேவி வழிபடப்பட்டாலும், மணாலியில் ஆன்மீகக் கவனம் இடும்பி தேவியின் மீது திரும்புகிறது. குறிப்பாக நவராத்திரி காலங்களில் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இது பக்தர்களின் ஆழ்ந்த பக்திக்குச் சான்றாக அமைகிறது.[4] வசந்த காலத்தின் வருகையையொட்டி, உள்ளூர் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இடும்பி தேவி திருவிழா எனும் போற்றப்படும் பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றனர்.[5]

வடிவமைப்பு

[தொகு]

இடும்பி தேவி கோயில், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட மரத்தாலான கதவுகளையும், கருவறைக்கு மேலே 24 மீட்டர் உயரமுள்ள மரத்தாலான சிகரம் அல்லது கோபுரத்தையும் கொண்டுள்ளது.[6] இக்கோபுரம் மரத்தாலான ஓடுகள் வேயப்பட்ட மூன்று சதுர வடிவக் கூரைகளையும், உச்சியில் பித்தளையாலான கூம்பு வடிவ நான்காவது கூரையையும் கொண்டுள்ளது. முதன்மைக் கதவின் செதுக்கு வேலைப்பாடுகள் பூமி தேவியான துர்க்கையை மையக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன.[7] விலங்குகள், இலை வடிவ அலங்காரங்கள், நடனக் கலைஞர்கள், [|சிறீ கிருட்டிணன்]] இன் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் நவக்கிரகம் ஆகியவையும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன.[8] இக்கோயிலின் அடித்தளம், சுண்ணாம்பு பூசப்பட்டு களிமண் பூச்சுடன் கூடிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உட்புறத்தில் ஒரு பிரம்மாண்டமான பாறை அமைந்துள்ளது. அதன் மீது இடும்பி தேவியைப் பிரதிபலிக்கும் 7.5 செ.மீ (3 அங்குலம்) உயரமுள்ள ஒரு சிறிய பித்தளைச் சிலை மட்டுமே உள்ளது. அப்பாறைக்கு முன்பாக ஒரு கயிறு தொங்கவிடப்பட்டுள்ளது. ஒரு ஐதீகத்தின்படி, முற்காலத்தில் மதவெறி கொண்டவர்கள் "பாவிகள்" என்று கருதப்பட்டவர்களின் கைகளை இந்தக் கயிற்றால் கட்டி, அவர்களை அப்பாறையின் மீது மோதும் வகையில் ஊசலாடச் செய்வார்களாம்.[7]

கோயிலிலிருந்து சுமார் எழுபது மீட்டர் தொலைவில், வீமனை மணந்த பிறகு பிறந்த இடும்பியின் மகன் கடோற்கஜனுக்கான ஒரு சன்னதி உள்ளது. இக்கோயிலின் மிகவும் வியக்கத்தக்க அம்சம் - அல்லது பக்தர்கள் மிகவும் நம்பிக்கையூட்டும் அம்சமாகக் கருதுவது - என்னவென்றால், கோயிலுக்குள் ஒரு பாறையில் செதுக்கப்பட்ட தேவியின் பாதச்சுவடுகள் வழிபடப்படுகின்றன.

மணாலி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடும்பி கோயில் அருகே ஓர் எருது

மகாபாரதக் கதை

[தொகு]
இடும்பி தேவி கோயிலில் உள்ள அறிவிப்புப் பலகை
இடும்பி தேவி கோயிலின் பக்கவாட்டுத் தோற்றம்

பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருந்ததாக இந்திய இதிகாசமான மகாபாரதம் கூறுகிறது. மணாலியில், இடும்பியின் சகோதரனும் வலிமை மிக்கவனுமான இடும்பன் இவர்களைத் தாக்கினான். அந்தச் சண்டையில் பாண்டவர்களிலேயே வலிமை மிக்கவனான வீமன் அவனைக் கொன்றான். பின்னர் பீமனும் இடும்பியின் சகோதரியான இடும்பியும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்குக் கடோற்கஜன் என்ற மகன் பிறந்தான் (இவன் பிற்காலத்தில் கௌரவர்களுக்கு எதிரான போரில் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான்). பீமனும் அவனது சகோதரர்களும் வனவாசத்தை முடித்துத் திரும்பியபோது, ​​இடும்பி அவர்களுடன் செல்லவில்லை. மாறாக, அங்கேயே தங்கித் தவம் (தியானம், பிரார்த்தனை மற்றும் விரதம் ஆகியவற்றின் கலவை) செய்து, இறுதியில் தேவி நிலையை அடைந்தாள்.

படத்தொகுப்பு

[தொகு]
இடும்பி தேவி கோயில்
மணாலியில் உள்ள இடும்பி தேவி கோயிலைச் சுற்றியுள்ள தேவதாரு மரக்காடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Hadimba Temple Kullu Manali Manali".
  2. ↑ "Hidimbi Temple". Archived from the original on 5 August 2006. Retrieved 14 September 2006.
  3. ↑ "Hadimba Devi Temple". Retrieved 21 June 2018.
  4. ↑ "Hidimba worshipped during Navaratri". http://timesofindia.indiatimes.com/city/chandigarh/hidimba-not-durga-is-worshipped-in-manali-during-navaratra/articleshow/57902893.cms. பார்த்த நாள்: 19 August 2017.
  5. ↑ Hidimba devi fair
  6. ↑ "Temples of the Himalayas". Retrieved 14 September 2006.
  7. 1 2 "Hidimba Devi Temple". Retrieved 14 September 2006.
  8. ↑ "The imposing architecture of Hadimba Devi Temple". Retrieved 21 June 2018.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hidimba Devi Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடும்பி_தேவி_கோயில்&oldid=4560101" இலிருந்து மீள்விக்கப்பட்டது