இடாலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடாலின்
Etalin
கிராமம்
நாடு 
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்திபாங் பள்ளத்தாக்கு
ஏற்றம்1,968
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்314
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

இடாலின் (Etalin) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் ஆகும். அனினி அல்லது மாலின்யே பாதையில் செல்லும் பயணிகளுக்கு சற்று இளைப்பாறும் நிறுத்தமாக இக்கிராமம் இருக்கிறது. அணினியில் இருந்து சுமார் 52 கிலோமீட்டர் தொலைவிலும் மாலின்யேவிலிருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவிலும் இடாலின் கிராமம் அமைந்திருக்கிறது. இக்கிராமத்திற்கு அருகில் இருப்பது அணினி பொது மருத்துவமனை ஆகும். இடாலின் கிராமத்தில் ஒரு நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. மேற்படிப்புக்கு இங்குள்ளவர்கள் அணினி மேல்நிலைப் பள்ளி அல்லது உரோயிங் மேல்நிலைப் பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். அசாம் மாநிலத்தின் மோகன்பாரி விமானநிலையம் இக்கிராமத்திற்கு அருகாமையில் உள்ள விமானநிலையமாக உள்ளது. இடாலின் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 314 ஆகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடாலின்&oldid=2062937" இருந்து மீள்விக்கப்பட்டது