இடான் மொழி
| இடான் மொழி Idaʼan Language | |
|---|---|
| Begak | |
| நாடு(கள்) | மலேசியா (சபா மாநிலம்) |
| பிராந்தியம் | லகாட் டத்து மாவட்டம் கினபத்தாங்கான் மாவட்டம் சண்டக்கான் மாவட்டம் |
| இனம் | இடான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10,000 (2013)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | dbj |
| மொழிக் குறிப்பு | idaa1241[2] |
இடான் மொழி (ஆங்கிலம்: Idaʼan Language, Idahan) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாழும் இடான் மக்களால் பேசப்படும் மலாய-பொலினீசிய மொழிகளில் ஒரு மொழியாகும்.
இடான் மொழி ஆஸ்திரோனேசிய மொழிக்குடும்பத்தின், மலாயோ-பொலினீசியக் கிளையின் கீழ் உள்ள வடக்கு போர்னிய மொழிக் குடும்பத்தின், வடகிழக்கு சபா மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. இது பங்கி தீவுகளில் பேசப்படும் போங்கி மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. பெகாக் மற்றும் சுப்பான் மக்களால் பேசப்படும் மொழிகள் இடான் மொழியின் வட்டார வழக்குகளாகக் கருதப்படுகின்றன.
வரலாறு
[தொகு]சபாவில் உள்ள பெரும்பாலான மொழிகளைப் போலல்லாமல், இடான் மொழி 15-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய நீண்ட இலக்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது. சாவி எழுத்துமுறையில் எழுதப்பட்ட இந்த மொழியின் பழமையான ஆவணம் கி.பி 1408-ஐச் சேர்ந்தது. தார்வெல் விரிகுடாவில் (Darvel Bay) வசித்த அப்துல்லா என்ற இடான் இனத்தைச் சேர்ந்தவர் இசுலாம் மதத்தைத் தழுவியதைப் பற்றிய விவரங்களை இந்த ஆவணம் வழங்குகிறது.
இதனால், இப்பகுதி மலேசியாவில் இசுலாத்தை ஏற்றுக்கொண்ட தொடக்ககாலப் பகுதிகளில் ஒன்றாக மாறியது. தற்போது இடான் மொழி, இலத்தீன் எழுத்துமுறையைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது. இந்த மொழி இலக்கியம், ஊடகங்கள் மற்றும் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது.[3]
வட்டார வழக்குகள்
[தொகு]இடான் மொழியில் மூன்று முக்கிய வட்டார வழக்குகள் உள்ளன:
- இடான் (Idaʼan)
- பெகாக் (Begak)
- சுப்பான் (Subpan)
இவற்றில் பெகாக் வட்டார வழக்கானது,[4] இளைய தலைமுறையினர் மலாய் மொழிக்கு மாறுவதால் அழியும் ஆபத்தில் உள்ளது
புவியியல் பரவல்
[தொகு]இம்மொழி மலேசியாவின் சபா மாநிலத்தின் லகாட் டத்து மாவட்டம், கினபத்தாங்கான் மாவட்டம், மற்றும் சண்டக்கான் மாவட்டம் [5]ஆகிய மாவட்டங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுமார் 10,000 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இடான் மொழி
Idaʼan Language at Ethnologue (18th ed., 2015) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Idaʼan". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Goudswaard (2005), p. 1
- ↑ Lobel, Jason William (2016). North Borneo Sourcebook: Vocabularies and Functors. University of Hawaii Press. ISBN 9780824857790.
- ↑ Banker (1984)
நூல்கள்
[தொகு]- Banker, John E. (1984). "The Idaʼan language". In King, Julie K.; King, John Wayne (eds.). Languages of Sabah: A Survey Report. Pacific Linguistics C-78. Canberra: Department of Linguistics, Research School of Pacific Studies, Australian National University. pp. 85–90. doi:10.15144/PL-C78.85.
- Goudswaard, Nelleke Elisabeth (2005). The Begak (Idaʼan) Language of Sabah. Utrecht Institute of Linguistics / LOT Netherlands Graduate School of Linguistic. ISBN 90-76864-73-X.
- Ray, Sidney H. (1913). The Languages of Borneo (in ஆங்கிலம்). The ASJP Database.