இடயிலக்காடு
![]() இடயிலக்காடு | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | கவ்வாயி காயல் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | கனரா |
| நிர்வாகம் | |
காசர்கோடு மாவட்டம், கேரளம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 1305 |
இடையிலக்காடு (Edayilakkad) என்பது கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் வலியபரம்பா ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சதுப்பு நிலமாகும். இது அரபிக் கடலின் நீண்ட, கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட கவ்வாயி காயல் பகுதியில் அமைந்துள்ளது. இடையிலக்காடு அதன் பல்லுயிர் பெருக்கம் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பெயர் பெற்றது. [1] இந்தத் தீவு கடல் மட்டத்திலிருந்து சராசரியாக மூன்று முதல் நான்கு மீட்டர் உயரத்தில் உள்ளது. இடையிலக்காட்டின் கிழக்கே கேரளத்தின் முதன்மை நிலப்பகுதி அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]இப்பகுதியைப் பற்றிய வரலாற்று அறிவு கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 1900களின் முற்பகுதி வரை இங்கு மக்கள் வசிக்கவில்லை என்றாலும், விஜயநகரப் பேரரசின் நிலப்பிரபுகளான லிங்காயத்துக்கள் ஒரு காலத்தில் இப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.[2] கேரள மாநிலம் உருவாவதற்கு முன்பு, இந்தப் பகுதி மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1930 களில் , இலங்கைத் தொழிலாளர்கள் பெருமளவில் தீவில் குடியேறினர்.[சான்று தேவை]
அமைவிடம்
[தொகு]இடையிலக்காட்டின் தெற்கே மாடக்கல் தீவுவும், கிழக்கே பிரதான நிலப்பரப்பில் திருக்கரிப்பூர் கிராமமும் அமைந்துள்ளது. அயிட்டி கிராமம் தீவின் வடக்கே உள்ளது. இந்தத் தீவு மலபார் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்திய வருவாய்த் துறையின் கூற்றுப்படி, இந்தத் தீவின் பரப்பளவு 312.01 ஏக்கர்கள் (126.27 ha) ஆகும். இதன் அகலம் காரணமாக, இடையிலக்காடு கேரளத்தின் வடக்குப் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றாக உள்ளது.
புவியியல்
[தொகு]இடையிலக்காடு அமைந்துள்ள கவ்வாயி ஏரி, மேற்கில் அரபிக் கடலில் இருந்து ஒரு மெல்லிய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளது. இது அநேகமாக விரிகுடா (ஏரி கடலில் இருந்து படிப்படியாகப் பிரிதல்) காரணமாக உருவானதாக இருக்கலாம். இந்த துண்டு நிலப்பகுதி வலியவரம்பா ("பெரிய எல்லை" என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது. கவ்வாயி ஏரியின் பரப்பளவு தோராயமாக 1,264 km2 (488 sq mi) ஆகும். [3]

காயல்
[தொகு]பெக்கலில் இருந்து 30 கி.மீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ள, கவ்வாயி காயல் கேரளத்தின் மிகவும் அழகிய காயல்ளில் ஒன்றாகும்.[சான்று தேவை] இடையிலக்காட்டின் வலியபரம்ப காயல் தோராயமாக 21 கிமீ [13 மைல்] நீளமும், 37.0 கிமீ [23.0 மைல்] அகலமும் கொண்டது. இது ஏழு ஆறுகளின் சங்கமத்திலிருந்து உருவாகின்றது. தேஜஸ்வினி ஆற்றின் தெற்கு முனையில் காயல் உள்ளது.
மக்கள் தொகை
[தொகு]தீவில் 250 வீடுகளும், அதில் 1,305 பேரும் வசிக்கின்றனர். [not in citation given]
விலங்கினங்களும் தாவரங்களும்
[தொகு]இடாயிலக்காடு பல்லுயிர்களுடன் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது மாநிலத்தில் அழிந்து வரும் வெள்ளை-வயிற்றுக் கடற்கழுகின் கூடு கட்டும் பகுதியாகவும், [4] [5] [6] நெர்விலியா ஆர்க்கிட்களின் தாயகமாகவும், [4] அலையாத்திக் காடுகளின் இருப்பிடமாகவும் இத்தீவு உள்ளது.[சான்று தேவை]
இடையிலக்காட்டில் ஒரு சிறிய காடு (அது "காவு" என்று அழைக்கப்படுகிறது) உள்ளது. அக்காடு பல குரங்குகளின் இருப்பிடமாக உள்ளது. இது பார்வையாளர்களை ஈர்ப்பாதாக உள்ளது. பார்வையாளர்கள் குரங்குகளுக்கு உணவளிக்கின்றனர். மேலும், அருகில் வசிக்கும் ஒரு வயதான பெண்மணி, குரங்குகளுக்கு தவறாமல் உணவளித்து வருகிறார். ஓணம் போன்ற விழாகளின்போது, குரங்குகளுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.
-
ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக குரங்குகளுக்கான விருந்து.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, M K Sunil (22 March 2017). "Kerala Falls Behind in Rainwater Harvesting - Times of India". The Times of India (Indiatimes). http://timesofindia.indiatimes.com/city/kochi/kerala-falls-behind-in-rainwater-harvesting/articleshow/57765952.cms. பார்த்த நாள்: 7 July 2017.
- ↑ Keladi Nayakas - The Rebellious Rani of Belavadi and Other Stories. Atlantic Publishers & Dist. 2001. ISBN 9788126901272. Retrieved 9 July 2017.
{{cite book}}:|work=ignored (help) - ↑ News; keralakaumudi.com; retrieved July 2017 பரணிடப்பட்டது 16 மார்ச் 2017 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 4.0 4.1 P S Harikumar. "Wetlands of Kerala: Degradation, Restoration and Future Management - A Case Study of Kavvayi Wetlanda Coastal Wetland in the Northern Kerala" (PDF). wgbis.ces.iisc.ernet.in. Centre for Ecological Sciences, Indian Institute of Science, Bangalore. p. 2. Retrieved 9 July 2017.
- ↑ Bernama (15 November 2011). "White-Bellied Sea Eagle Under Threat In Kerala". ssig.gov.my. South-South Information Gateway. Retrieved 9 July 2017.
- ↑ Muhamed Jafer.P (2000). ""Habitat use of birds of north malabar coast with special reference to the white bellied sea eagle, haliaeetus leucogaster" Thesis: Chapter 4 - Biology and Ecology of Whitebellied Sea Eagle, Halineetus leucogaster (Gmelin)" (PDF). shodhganga.inflibnet.ac.in. Department of Zoology, St. Joseph's College Devagiri, University of Calicut. pp. 64, 57, 68. Retrieved 9 July 2017.
