இடச்சு உலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடச்சு உலோகம் (Dutch metal) என்பது பித்தளையின் ஒரு வகையாகும். இந்த கலப்புலோகம் 85-88% செப்பு மற்றும் துத்தநாகத்தைக் கொண்டுள்ளது. இந்த கலப்புலோகம், தங்க இயைபு இலை, இடச்சு தங்கம்  "இச்லாக் உலோகம்" மற்றும் இச்லாக் இலை என்றும் அழைக்கப்படுகிறது.[1]

இந்த கலப்புலோகம் எளிதில் தகடாக்கவும், கம்பியாக்கவும் கூடிய இயல்புடையது. இது மேலும் மிக மெல்லிய தாள்களாக அடிக்கக்கூடிய இயல்புடையது. இந்தத் தகடுகள் உலோக இலைகளாகவும், போலித தங்க இலைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.[2] இந்த கலப்புலோகத்துடன் ஆர்சனிக்கை சேர்க்கும் போது வெண்மை நிறம் கொண்ட இதே போன்ற பண்புகளை உடைய கலப்புலோகம் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dutch metal" (in en). Encyclopedia Britannica. https://www.britannica.com/technology/Dutch-metal. 
  2. Becker, Ellen (1998). Gold Leaf Application and Antique Restoration. Schiffer Pub. Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7643-0632-7. https://archive.org/details/goldleafapplicat0000beck. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடச்சு_உலோகம்&oldid=3698061" இலிருந்து மீள்விக்கப்பட்டது