இஞ்சியோன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஞ்சியோன் (ஆங்கிலம்: Inchon)கொரியப் போரின் திருப்புமுனையாகக் கருதப்படும் இஞ்சியோன் போரைப் பற்றி 1981 இல் வெளிவந்த போர் திரைப்படம் ஆகும். இப்படத்தை தெரன்ஸ் இயங் இயக்கியுள்ளார் மற்றும் "ஒருங்கிணைப்பு இயக்க"த்தின் நிறுவனர் சன் மியுங் மூன் இடை தயாரிக்க நிதியுதவி அளித்தார். இதில் இலாரன்ஸ் ஆலிவர் தளபதி டக்ளஸ் மாக்ஆர்தராக நடித்துள்ளார். 1950 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் இஞ்சியோனில் எதிர்பாராதவிதமாக நிலம் மற்றும் நீர் இரண்டிலும் அமெரிக்கா தனது படையை இறக்கியத அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது.. சாக்குலின் பிஸ்ஸெட், பென் கஸ்ஸாரா, தோஷிரோ மிபூன் மற்றும் ரிச்சர்ட் ரவுண்ட்டிரீ ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இது தென் கொரியா, கலிபோர்னியா, இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது.

இஞ்சியோனின் கதை என்பது இராணுவ நடவடிக்கை மற்றும் மனித நாடகம் இரண்டும் அடங்கும். கதாபாத்திரங்கள் ஆபத்தை எதிர்கொள்கின்றன மற்றும் பல்வேறு தனிப்பட்ட மற்றும் வியத்தகு சூழ்நிலைகளில் ஈடுபடுகின்றன. தென் கொரியாவைக் காப்பாற்றியதாகக் கருதப்படும் இஞ்சியோன் போரில் வட கொரியப் படைகளுக்கு எதிரான அமெரிக்க வெற்றியுடன் படம் முடிகிறது. இந்தப் படம் தயாரிக்க 46 மில்லியன் செலவானது மற்றும் தயாரிப்பின் போது பல சிக்கல்களை எதிர்கொண்டது, இதில் ஒரு சூறாவளி மற்றும் ஒரு நடிகரின் மரணம் ஆகியவை ஆகியவையும் அடங்கும். "ஒருங்கிணைப்பு இயக்கம்" மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இராணுவம் ஆகிய இரண்டும் படப்பிடிப்பின் போது பணியாளர்களை துணை நடிகர்களாக வழங்கின.

இந்தப் படம் 1982 செப்டம்பரில் அமெரிக்காவிலும் கனடாவிலும் திரையரங்கில் வெளியிடப்பட்டது, பின்னர் திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனை குறைவாக இருந்ததால் விரைவாக திரும்பப் பெறப்பட்டது. இது சில நேரங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும், இது ஒருபோதும் வீடுகளில் காணொளியாக வெளியிடப்படவில்லை. இது 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்திய ஒரு படமாகும். அந்த நேரத்தில் விமர்சகர்கள் தொடர்ந்து மோசமான மதிப்புரைகளை வழங்கினர், பின்னர் நியூஸ் வீக், டிவி கைடு மற்றும் கனடியன் பிரஸ் உள்ளிட்ட வர்ணனையாளர்கள் எல்லா நேரத்திலும் மோசமான படங்களில் இஞ்சியோனை வகைப்படுத்தியுள்ளனர்.

கதை[தொகு]

1950 செப்டம்பர் 15 லிருந்து19 வரை நடந்த கொரியப் போரின் போது இஞ்சியோன் போரை இந்த படம் சித்தரிக்கிறது, இது போரின் திருப்புமுனையாக கருதப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகன் தளபதி டக்ளஸ் மாக்ஆர்தர் ஆவார், இவர் 1950 ஆம் ஆண்டில் இஞ்சியோனில் எதிர்பாராதவிதமாக நிலம் மற்றும் நீர் இரண்டிலும் அமெரிக்காவின் இராணுவத்தை வழிநடத்தினார். இந்த படத்தின் ஒரு துணைக்கதையாக ஒரு அமெரிக்க தம்பதியினர் யுத்தம் காரணமாக தங்கள் உறவில் சந்திக்கும் சிரமங்களைப் பற்றி கதை சொல்கிறது.

தயாரிப்பு[தொகு]

இஞ்சியோனுக்கு சன் மியுங் மூன் மற்றும் ஜப்பானிய செய்தித்தாள் வெளியீட்டாளர் மிட்சுஹாரு இஷி ஆகியோர் நிதியளித்தனர். படத்தின் தயாரிப்பில் ஆரம்பத்திலிருந்தே மூன் ஈடுபட்டிருந்தார். ஜப்பானில் "ஒருங்கிணைப்பு இயக்க"த்தின் உறுப்பினரும் மூனின் நண்பருமான இஷி, படத்தின் தயாரிப்பாளராக பணியாற்றினார்; மற்றும் மூன், "கொரிய சிறப்பு ஆலோசகர்" என்று புகழ் பெற்றிருந்தாலும், இஷியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஒன் வே புரொடக்ஷன்ஸுக்கு 30 மில்லியனை வழங்கினார். திரைப்படத்தின் நிதியுதவி மற்றும் அதன் தயாரிப்பின் பின்னணியில் தான் இருப்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வதை மூன் ஆரம்பத்தில் விரும்பவில்லை.இப்படத்தை உருவாக்க கடவுளால் அறிவுறுத்தப்பட்டதாக இஷி கூறினார். இணை தயாரிப்பாளரும் அமெரிக்காவின் ஒருங்கிணைப்பு தேவாலயத்தின் உறுப்பினருமான ராபர்ட் ஸ்டாண்டர்டால் கூடுதல் நிதி வழங்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]