உள்ளடக்கத்துக்குச் செல்

இச்சோ கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரது போகோவிலிருந்து தென்கிழக்கில் மலையில் அமைந்துள்ள இஜோ கோயில்

இஜோ கோயில் (Ijo Temple) (இந்தோனேசிய மொழி: Candi Ijo ) என்பது இந்தோனேசியாவின் யோககர்த்தாவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், ரது போகோவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இந்துகோயிலாகும். ரது போகோ என்பது ஒரு தொல்லியல் தளமாகும. இஜோ கோயில், கண்டி வகையைச் சார்ந்த கோயில். கண்டி என்பதானது இந்து அல்லது பௌத்தக் கோயிலைக் குறிப்பதாகும். மெடங்க் ஆட்சிக்காலத்தில் பொ.ச. 10 முதல் 11 ஆம் நூற்றாண்டுக்கு இடையேயான காலகட்டத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டது.[1]

இருப்பிடம்

[தொகு]

கோயிலின் வளாகம் யோககர்த்தாவில் ஸ்லெமன் ரீஜென்சி, கெகமதன் பிரம்பனன் பகுதியில் உள்ள சாம்பிரெஜோ கிராமத்தில் குரோயோகன் பகுதியில் அமைந்துள்ளது. கோயிலின் பெயர் அதன் இருப்பிடமான குமுக் இஜோ மலையிலிருந்து பெறப்பட்டதாகும். ரது போகோ தொல்பொருள் வளாகத்திலிருந்து தென்கிழக்கே 4 கிலோமீட்டர் தொலைவில் யோககர்த்தாவுக்கு கிழக்கே அமைதியான பகுதியில் மலையின் மேற்கு சரிவில் கோயில் வளாகம் காணப்படுகிறது. கோவில் கடல் மட்டத்திலிருந்து 410 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குமுக் இஜோவின் மேற்கு மலை அரிசி நெல் வயல்கள், கிராமங்கள் மற்றும் அடிசுசிப்டோ சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய வகையில் அமைந்துள்ளது.

கோயில் வளாகமானது 0.8 ஹெக்டேர் அளவினைக் கொண்டு அமைந்ள்ளது, இருந்தாலும் அசல் கோயில் வளாகம் மிகவும் பெரியதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மலைப்பாதையிலும், மேற்குப் பக்கங்களிலும் சரிவுகளிலும் சில தொல்பொருள் கலைப்பொருட்கள் மற்றும் கோயில் இடிபாடுகள் ஆஙகாங்கே காணப்படுகின்றன. அவை முதன்மைக் கோயிலுக்கு ஏறிச் செல்கின்ற பாதையில் இருந்து பெரிய வளாகம் தோன்றி அமைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டிடக்கலை

[தொகு]

கோயில் வளாகம்

[தொகு]

மலையின் நிலப்பரப்பின் படி கோயில் வளாகம் மேற்குத் திசையிலிருந்து நோக்கி கிழக்கு நோக்கி பரவியதாக மதிப்பிடப்பட்டுள்ளது; மேற்குப் பகுதியிலிருந்து மலையின் உயரமான மைதானத்தில் உள்ள முதன்மைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் பல மாடிகள் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. மேற்கு பகுதியில் சில கோயில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அகழ்வாயின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களாகும்.[1] இந்த மொட்டை மாடிப் பகுதிகளில்களில் 10 க்கும் மேற்பட்ட பெர்வாரா அல்லது குறைந்த எண்ணிக்கையிலானகோயில்களின் இடிபாடுகள் இன்னும் புதைக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

கோயில்கள்

[தொகு]

பெர்வாரா கோயில்கள்

[தொகு]
மூன்று பெர்வாரா கோயில்களில் ஒன்று.

மேல்புற மாடித் தளத்தில் முதன்மைக் கோயில் வளாகம் அமைந்துள்ளது. அதில் மேற்கு நோக்கிய ஒரு பெரிய பிரதான கோயில், அதன் முன்னால் மூன்று பெர்வாரா கோயில்களையும் கொண்டுள்ளது. மூன்று பெர்வாரா கோயில்களும் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளன. இந்து மதத்தின் மிக உயர்ந்த முக்கடவுளர்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் எனப்படுகின்ற மும்மூர்த்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன: இந்த மூன்று கோயில்களிலும் செல்லா அல்லது அறை உள்ளது. மற்றும் ரோம்பஸ் வடிவத்தில் துளையிடப்பட்ட ஜன்னல்கள் உள்ளன. கூரையானது மூன்று தளங்களைக் கொண்ட நிலையில் உள்ளது. அந்தக் கூரை அல்லது உச்சிப் பகுதியானது ரத்னங்களின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளது.

முதன்மைக் கோயில், மூன்று மாடங்கள் உள்ளன. பின்புறத்தில் பெர்வாரா கோயில்களில் ஒரு கோயில் உள்ளது.

முதன்மைக் கோயிலில் சதுர வடிவ தரைத் தளத் திட்டம் கொண்டு அமைந்துள்ளது.கர்ப்பக்கிருகம் செல்வதற்கான நுழைவாயில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் இரு புறங்களிலும் ஜன்னல் அல்லது மாடம் போன்ற அமைப்புகள் உள்ளன. அதனை கோஷ்டம் என்றும் கூறுவர். அதில் யாளி - மகர சிற்பங்களைக் கொண்ட அலங்காரம் காணப்படுகிறது. மகரம் என்பது முன்பாதி முதலை, யானை, மான் போன்ற விலங்குகளின் வடிவங்களையும், பின்பாதி மகரத்தைப் போன்றும் அமையப்பெற்றது. வடக்குப் பகுதியில் கிழக்கு மற்றும் தென்புற சுவர்கள் உள்ளன. சுவற்றில் ஒவ்வொரு பகுதியிலும் மாடங்கள் உள்ளன. அவற்றிலும் யாளி-மகர சிற்ப அலங்காரம் காணப்படுகிறது. நடுவே உள்ள மாடமானது பக்கங்களில் உள்ள மாடத்தைவிட சற்றே உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளதுமைய முக்கிய இடம் மற்ற இரண்டு பக்கங்களை விட சற்று அதிகமாக உள்ளது. இந்த கோஷ்டங்கள் தற்போது காலியாக உள்ளன. இங்கு அநேகமாக ஒரு காலத்தில் இந்து மூர்த்தி (சிற்பங்கள்) இருந்திருக்கலாம்.

தரையில் இருந்து 1.2 மீட்டர் உயரத்தில் உள்ள முதன்மை வாயிலை அடைவதற்கு இரண்டு மகரங்களுடன் கூடிய படிக்கட்டுகளின் உள்ளன. மகரங்கள் படிக்கட்டுகளின் புறங்களில் காணப்படுகின்றன. கதவின் மேற்புறத்தில் யாளி தலை உள்ளது. அது மீன் உடல் சிற்பத்தோடு இணைந்த நிலையில் கதவின் ஒவ்வொரு புறத்திலும் காணப்படுகிறது. யாளியும் மகரம் இணைந்து அமைந்துள்ள முறை பொதுவாக பண்டைய ஜாவாவின் கோவில்களில் காணப்படுகிறது. மகரத்தின் வாய்க்குள் செதுக்கப்பட்ட நிலையில் அமைந்த சிறிய கிளிகள் காணப்படுகின்றன.

முதன்மை அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய லிங்கம் மற்றும் யோனி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட நாகம் உள்ளது. லிங்கம் மற்றும் யோனியின் இணைப்பானது சிவன் பார்வதியின் புனித ஒன்றிணைவைக் குறிக்கின்ற அடையாளமாகும். பார்வதி இங்கு சக்தியாக சுட்டப் பெறுகிறார். அறையில் உள் சுவரின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று மாடங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஜோடி தேவதைகள், மற்றும் அந்த மாடத்தை நோக்கி பறந்து வரும் வகையில் சில இந்துக் கடவுளர்கள் காணப்படுகின்றனர்.

முதன்மைக் கோயிலின் கூரை மூன்று தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. மேலே செல்லச் செல்ல தளத்தின் அளவு சிறிதாக அமையும் வகையில் அவை காணப்படுகின்றன. இது பிரமிடு வடிவத்தை ஒத்துள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு தளத்திலும் 3 ரத்னங்கள் உள்ளன. கோயிலின் உடல் பகுதிக்கும் கோபுரம் போன்ற உச்சிப் பகுதிக்கும் இடையிலான விளிம்பில் மலர் வடிவங்கள் மற்றும் சிறிய சிற்பங்கள் அலங்கரித்த வகையில் காணப்படுகின்றன. அங்கு இந்துக் கடவுளர்களின் உருவங்கள் உள்ளன. அவற்றில் சில உருவங்கள் கையில் மலர்களைப் பிடித்த வண்ணம் அமைந்துள்ளன.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Candi Ijo". National Library of the Republic of Indonesia. Archived from the original on 15 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இச்சோ_கோவில்&oldid=3543338" இலிருந்து மீள்விக்கப்பட்டது