இசை (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவிஞர் இசை :

1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர்  மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தான் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகிறார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் மதுரையில் உள்ள ‘Suppurayalu College of Pharmacy’ எனும் கல்லூரியில் ‘Diploma in Pharmacy’  படித்து முடித்துவிட்டு தற்போது  தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து  ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி  முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும் www.isaikarukkal.blogspot.com என்ற இணையதளத்தை தொடங்கி அதில் தொடர்ந்து தமது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் தற்போதைய கவிதை உலகில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகது. இவர் 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.


கவிஞர் இசையின் படைப்புகள்:

கவிஞர் இசை தமது அலுவலகப் பணிகளுக்கிடையே தொடர்ந்து தமது இலக்கியத் திறனாய்வு பணியினை செய்தும் நவீன சித்தாந்தங்களுடன் கவிதைகள் எழுதியும் வருகிறார். இவர் முறையே கீழ்க்கண்டவாறு கவிதைகள் மற்றும் இலக்கியத் திறனாய்வு கட்டுரைகளை தொகுத்து நூல்களாக வெளியிட்டுள்ளார்.

1.  காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)        - 2002

2.  உறுமீன்களற்ற நதி (கவிதைகள்)                                - 2008

3.  சிவாஜிகணேசனின் முத்தங்கள் ( கவிதைகள்)            - 2011

4.  அதனினும் இனிது அறிவினர் சேர்தல் (கட்டுரைகள்)          - 2013

5.  அந்தக் காலம் மலையேறிப்போனது (கவிதைகள்)     - 2014

6.  லைட்டா பொறாமைப்படும் கலைஞன் (கட்டுரைகள்)- 2015

7.  ஆட்டுதி அமுதே ! (கவிதைகள்)                                   - 2016

8.  உய்யடா ! உய்யடா ! உய் !  (கட்டுரைகள்)                 - 2017

9.  பழைய யானைக் கடை (கட்டுரைகள்)                       - 2017

10. வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் (கவிதைகள்)         - 2018

11. நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்                 - 2019

இசை

பிறப்பு ஆ.சத்தியமூர்த்தி

புனைப்பெயர் இசை
http://isaikarukkal.blogspot.in/

இசை (பி. 1977) என்பவர் தமிழ் கவிஞர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் ஆ. சத்தியமூர்த்தி. கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார். அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றுகின்றார். 2000க்குப் பிறகு கவிதைகள் எழுதித் தொடங்கியவர். சமீபகாலத்தில் மிகவும் கவனம் பெற்ற கவிதைகளை எழுதியுள்ளார். தீம்தரிகிட, கருக்கல், உயிர்மை, காலச்சுவடு, தீராநதி உள்ளிட்ட இலக்கிய இதழ்கள் பலவற்றில் இவர் கவிதைகள் வெளியாகி உள்ளன. ஞானக்கூத்தனுக்குப்பிறகு, கவிதையில் அங்கதத்தைக் கொண்டு வந்தவர். கலாப்ரியாவிற்குப் பிறகு, கவிதையை வெகுசன ரசனைக்குக் கொண்டு சென்றவர். தீவிர கவிதை எழுத்துக்கு மாற்றாக, வெகுசனத்திற்கு விருப்பமான பாலியல், திரைப்படம், கேளிக்கை ஆகியவற்றை முன்னிறுத்துவபர்.இவரது நூல்கள்:

கவிதைத் தொகுதிகள்[தொகு]

  1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி 2002
  2. உறுமீன்களற்ற நதி 2008
  3. சிவாஜி கணேசனின் முத்தங்கள் 2012
  4. அந்தக்காலம் மலையேறிப்போனது 2014
  5. ஆட்டுதி அமுதே 2016
  6. வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் 2018[சான்று தேவை]

கட்டுரைத் தொகுப்பு[தொகு]

  1. அதனினும் இனிது அறிவினர் சேர்தல் (2013)
  2. லைட்டா பொறாமைப்படும் கலைஞன் 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசை_(கவிஞர்)&oldid=2996260" இருந்து மீள்விக்கப்பட்டது