இசைவுத்துடிப்புகள்-சித்தர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சித்தர்கள் "தம்முடைய பட்டறிவைப் பகிரந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் இலக்கியப் படைப்பினை உலகிற்கு கொடையளித்துள்ளனர். 1.தெய்வீக அகத்தூண்டுதல், 2.அனுபவ பரிமாற்றத்தடிப்பு, 3.மனப்பயிற்சியைப் புலப்படுத்தல், 4.இன்புறுத்த தூண்டுதல், 5.மரபினைப் போற்றுதல், 6.தன் வெளிப்பாட்டுத்துடிப்பு, 7.மனிதரைப் பற்றிய ஆர்வத்துடிப்பு போன்றவற்றை உடல்,மனம்,இறைநெறி, மொழிப்பற்று,மருத்துவம்,வீடுபேறு என பல நிலைகளுக்குள் அடக்கி கூறியிருக்கின்றனர். அவிவாதம் என்பதற்கு இசைவு என்று பொருள். சித்தர்கள் எவ்வெவ்வற்றுடன் இசைவுடன் சென்றுள்ளனர் என்பதைக் காண்போம். இடைக்காட்டுச்சித்தர் இறைமையிடம் அன்பு இல்லாதவர்கள் முக்தி அடைய முடியாது என்றும், " நட்ட கல்லும் ........"என்ற பாடல் மூலம் பாம்பாட்டிச்சித்தரும் இறைநிலையை மனித உருவிலோ (அ)குறிப்பிட்ட இடத்திலிருந்து அருளுகின்ற அம்சமில்லை என்று கூறியுள்ளார். கொங்கணமுனிவர் "கடவுள் ஒன்றே !வேதம் ஒன்றே! .... என்று தன் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். தங்கள் இலக்கியங்களில் மனிதர்களை மனிதர்களாக்குவதற்கு வேண்டிய மனப்பயிற்சிகளில் அறக்கருத்துகளை வலியுறுத்தல், மனதினை மாசின்றி காத்தல், தீமைகளை நீக்கி நன்மைகள் செய்தல் போன்றவற்றை வலியுறுத்தியுள்ளனர். சித்தர்கள் மெய்ஞானமுடையவர்களாய் எல்லாவற்றுடனும் இசைந்து தங்கள் அனுபவக் கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூறியுள்ளனர்.