இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்கள்'அரசியல் பொருளாதார கலாச்சார மாற்றங்களுக்கு இடையில் தமிழிசை தன்னில் புதுமைகளைப் புகுத்தவும் அவற்றை மேலும் போளிவுபடுத்தவும் அண்ணாமலை அரசர் அவர்களால் 1943 இல் தமிழிசை இயக்கம் தொடங்கப்பட்டது. சர். ஆர். கே சண்முகம் செட்டியார், கோவை சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், இரசிகமணி டி. கே. சி , கல்கி ஆகியோர் தமிழிசை இயக்கத்தை முன்னின்று செயல்படுத்தினார்கள்.

ஆராய்ச்சியாளர்கள்[தொகு]

பல்வேறு காலகட்டத்தில் அறிஞர் பலர் இசைத்தமிழ் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

 1. அண்ணாமலை ரெட்டியார் -- காவடிச் சிந்து
 2. ஆபிரஹாம் பண்டிதர் -- கருணாமிர்தசாகரம்
 3. விபுலானந்த அடிகள் -- யாழ் நூல்
 4. டாக்டர் எஸ். இராமநாதன் -- சிலப்பதிகாரத்து இசைநுணுக்க விளக்கம்.
 5. கு. கோதண்டபாணியார் -- பழந்தமிழிசை
 6. அ. இராகவனார் -- இசையும் யாழும்
 7. வரகுண பாண்டியர் -- பாணர் கைவழி
 8. குடந்தை சுந்தரேசனார் -- முதல் அய்திசைப்பண் .
 9. வீ. ப. கா. சுந்தரம் -- தமிழிசைக் கலைக் களஞ்சியம்
 10. பேராசிரியர். பி. சாம்பமூர்த்தி -- தெனிந்திய சங்கீதமும் சந்கீதக்காரர்களும்
 11. ஏ. என். பெருமாள். -- தமிழர் இசை
 12. இ. ஜான் ஆசிர்வாதம் -- தமிழர் கூத்துகள்
 13. ஆர். ஆளவந்தார் -- தமிழர் தொல்கருவிகள்
      முதலானோர் இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்களாக அறியப்படுகிறார்கள். மேற்கூறப்பெற்ற அராய்ச்சியாளர்கள் பற்றிய ஆய்வுகள் பல தமிழில் வெளிவந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பார்வை நூல்[தொகு]

உழிஞை - தமிழியல் ஆய்வு வரலாறு, முனைவர்பட்ட ஆய்வாளர்கள், சென்னைப் பல்கலைக்கழகம், நறுமுகை வெளியீடு.