இசைச் சொற்பொழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கீத கதாப்பிரசங்கம் என்ற வடமொழிச் சொற்றொடரால் பரவலாக அறியப்படும் இசைச் சொற்பொழிவு, பெரும்பாலும் இந்து சமயக் கதைகளையும் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவதற்கான ஒர் ஊடகமாகப் பயன்பட்டு வருகிறது. இது, சமயம் சார்ந்த புராணங்களையும், கருத்துக்களையும் இடையிடையே பாடப்படும் இசைப் பாடல்களின் துணையோடு மக்களுக்குச் சுவைபட எடுத்துக்கூறும் ஒரு கலையாகும். இவ் இசைச் சொற்பொழிவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் விரவி வரவேண்டும். இயல், இசையோடு ஏற்ற இறக்கம், உச்சரிப்புக்கள், தனியுரை, இசையிட்ட உரை, நாடகத்திற்கு புலப்படுவது போல் நல்ல முகபாவனைகள் கொண்டு முற்று முழுதாக இவ்வம்சங்களைக் கொண்டு அமைவதே இசை சொற்பொழிவாக அமைகிறது. இவ்வகைக் கலையில் இசைப் பக்கவாத்தியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை சொற்பொழிவு தோன்றியது எனுபதற்கான ஆதாரங்கள் கிடையாது.

காதாப்பிரசங்கியார்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைச்_சொற்பொழிவு&oldid=3830810" இலிருந்து மீள்விக்கப்பட்டது