இசுரேலில் வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுரேலில் பேரீச்சை அறுவடை

இசுரேலில் வேளாண்மைத் துறை நன்கு வளர்ச்சிபெற்ற துறையாக விளங்குகிறது. இசுரேலின் தட்பவெப்பநிலை வேளாண்மைக்குச் சாதகமாக இல்லாத சூழலிலும் இசுரேல் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு முக்கியமான நாடாகவும் வேளாண் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி நாடாகவும் உள்ளது. இந்நாட்டின் பரப்பில் பாதிக்கு மேல் பாலை நிலமாகும். மேலும் இங்கு நிலவும் வெப்பநிலையும் நீர்ப்பற்றாக்குறையும் வேளாண்மைக்குப் பாதகமாக அமைந்துள்ளன. நாட்டின் பரப்பில் 20% மட்டுமே இயல்பாக வேளாண்மைக்கு ஏற்றவை.[1] வேளாண்மைத் துறை இசுரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆகவும் ஏற்றுமதியில் 3.6% ஆகவும் உள்ளது.[2] நாட்டின் மொத்த வேலை செய்யும் மக்களின் உழவுப் பணி செய்பவர்கள் 3.7%. இசுரேல் தனது உள்நாட்டுத் தேவையில் 95% அளவுக்குத் தானே உற்பத்தி செய்து கொள்கிறது. தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், இறைச்சி, காப்பி, கொக்கோ, சர்க்கரை போன்றவற்றை இறக்குமதி செய்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Israel Peri-urban Agriculture
  2. 2.0 2.1 "Agriculture in Israel". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரேலில்_வேளாண்மை&oldid=1561263" இலிருந்து மீள்விக்கப்பட்டது