இசுரேலிய சின்னம்
இசுரேலிய சின்னம் Emblem of Israel | |
---|---|
![]() | |
விபரங்கள் | |
பாவிப்போர் | இசுரேல் |
உள்வாங்கப்பட்டது | 10 பெப்ரவரி 1949 |
விருதுமுகம் | மங்கலான நீல கேடகம், ஒரு மெனோரா இரண்டு சமமான ஒலிவக் கிளைகளின் நடுவில்; அடிப்பாகத்தில் "ישראל" (இசுரேல்) என்ற எழுத்து |
குறிக்கோளுரை | ישראל "இசுரேல்" |
இசுரேலிய சின்னம் (எபிரேயம்: סמל מדינת ישראל) மெனோராவினைச் சுற்றி அதன் இருபுறமும் ஒலிவக் கிளையினால் சூழப்பட்டு, அதன் கீழ்புறம் இசுரேல் ("ישראל") என எபிரேயத்தில் எழுதப்பட்டு காணப்படுகின்றது. இது பொதுவாக இளம் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இசுரேலிய சின்னம் அதன் பாவனைக்கு ஏற்ப வேறுபட்ட நிறங்களிலும் காணப்படும்.
வரலாறு[தொகு]
இசுரேலிய அரசு 1948 இல் நடைபெற்ற வடிவமைப்பு போட்டியிலிருந்து இச்சின்னத்தினை உள்வாங்கியது. அப்போட்டியில் கப்ரியல், மக்சிம் சமிர் ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர். அவர்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய போட்டியாளர்கள் சிலரின் வடிவமைப்பு பகுதிகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.
குறியீடு[தொகு]
இச் சின்னத்திலுள்ள உருவம் டைட்டஸ் வளைவிலுள்ள மெனோராவை அடிப்படையாகக் கொண்டது. மெனோரா புராதன எருசலேம் கோவிலில் பாவிக்கப்பட்டது. முன்பு யூதத்தின் அடையாளமாகக் காணப்பட்ட இது, பிரபஞ்ச ஞானோதயத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.
இச் சின்னம் விவிலிய தீர்க்கதரிசியான சக்கரியாவின் தரிசனத்தின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். சக்கரியா நூலின் 4ம் அதிகாரத்தில் மெனோரா இரு ஒலிவ மரங்களின் மத்தியில் காணப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
ஒலிவ கிளைகள் சமாதானத்தின் அடையாளமாக கருதப்படுகின்றது.
வேறு வடிவங்கள்[தொகு]
மொசாட்டின் சின்னத்தில் தேசிய சின்னத்திலுள்ள மெனோரா பாவிக்கப்படுகிறது
குறிப்புக்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
பொதுவகத்தில் Emblem of Israel தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.