இசுரேலிய இராணுவத் தலைமையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுரேலிய இராணுவத் தலைமையகம்
செயற் காலம்1998
நாடு இசுரேல்
பற்றிணைப்பு இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
சுருக்கப்பெயர்(கள்)மாஸி (Mazi)

இசுரேலிய இராணுவத் தலைமையகம் அல்லது இராணுவ தலைமையங்களின் பொது அலுவலர் கட்டளை (General Officer Commanding Army Headquarters, எபிரேயம்: זרוע היבשה‎, Zro'a HaYabasha, படைக்கலம்) என்பது 1998 இல் பல படைகளின் தலைமையகமாகக் காணப்படுகின்றது. இது எபிரேய மொழியில் மாஸி என உத்தியோகப் பூர்வமற்று அழைக்கப்படும். இது கணினிப் பாதுகாப்புப் பிரிவு உட்பட்ட[1] இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் தரைப்படைகளை ஒன்று சேர்க்கிறது. தற்போதைய இசுரேலிய தரைப்படைகளின் அளவானது கிட்டத்தட்ட 125,000 செயலிலுள்ள படைவீரர்களையும் 600,000 நெருக்கடி கால படைவீரர்களையும் கொண்டுள்ளது.

பிரிவுகளும் கட்டமைப்பும்[தொகு]

கட்டமைப்பு வரைபடம்

இது ஐந்து தரைப் போர் நடவடிக்கைப் படைகளைக் குறித்த இராணுவ செயற்பாட்டிற்காகக் கொண்டுள்ளது.

 • சார்பியக்கப் படைகள்
  • இசுரேலிய காலாட்படை (חיל הרגלים)
  • கவசப் படை (חיל השריון)
 • சண்டை உதவிப் படைகள்
  • இசுரேலிய பீரங்கிப்படைகள் (חיל התותחנים)
  • இசுரேலிய பொறியியல் படை (חיל ההנדסה הקרבית)
  • இசுரேலிய கள புலனாய்வுப் படை (חיל האיסוף הקרבי)

மேலதிகமாக இன்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது:

 • திட்டப் பிரிவு (חטיבת התכנון)
 • "தரைப்" பிரிவு (חטיבת יבשה)
 • தனிநபர் பிரிவு (חטיבת כוח-אדם)
 • தொழில்நுட்பப் பிரிவு (חטיבת הטכנולוגיה)

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]