இசுரீபன் லூவிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசுரீபன் ஃகென்றி லூவிச் (ஆங்கிலம்: Stephen Henry Lewis, பிறப்பு நவம்பர் 11, 1937) ஒரு கனடிய இடதுசாரி அரசியல்வாதி, சமுக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர், அரசியல் தூதர், பேராசிரியர். 1970 களில் ஒன்ராறியோ மாகாணத்தின் புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக விளங்கினார். 1980 களின் நடுவில் ஐக்கிய நாடுகளுக்கான கனடிய தூதராக நியமிக்கப்பட்டார். 1990 களில் பல்வேறு ஐ.நா முகாமைகளில் பணியாற்றினார். 2000 களில் இவர் ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி/எயிட்சு தொடர்பான சிறப்பு தூதராக செயற்பட்டார். தற்போது இவர் ரயர்சன் பல்கலைக்கழகத்தில் ஒரு கொளவரவ பேராசிரியராகப் பணிபுரிகிறார், தொடர்ந்து சமுக விடயங்கள் தொடர்பாக குரல் எழுப்பி வருகிறார். இவரது தலைமையில் இயங்கும் இசுரீபன் லூவிசு அறக்கட்டளை எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரீபன்_லூவிசு&oldid=2214072" இருந்து மீள்விக்கப்பட்டது