இசுமார்ட் அட்டை


இசுமார்ட் அட்டை (ஆங்கிலம்: Toll Network Automatic Payment Systems SmartTAG; மலாய் மொழி: Sistem Membayar Automatik Rangkaian Tol SMART) என்பது மலேசிய விரைவுச்சாலை; மற்றும் நெடுஞ்சாலை (Malaysian Expressway System) அமைப்புகளின் நடத்துனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு மின்னணுக் கட்டண (Electronic toll collection) (EPS) முறைமையாகும்.
தொட்டு செல் அட்டையின் பயன்பாட்டிற்கான ஒரு துணை முறைமையாக இசுமார்ட் அட்டை செயல்படுத்தப்படுகிறது. இந்த முறைமை முதன்முதலில் மலேசியாவில் 1999-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது; மேலும் போக்குவரத்து அணுகல் முறையை எளிமைப்படுத்துவதற்காகவும் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
கூறுகள்
[தொகு]இசுமார்ட் அட்டை என்பது முந்தைய தொட்டு செல் பயன்பாட்டு அமைப்பின் நீட்டிப்பாக தெராஸ் தெக்னோலாஜி சென்டர் (Teras Teknologi Sdn Bhd) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது.[1] தற்போது இசுமார்ட் அட்டை, தச் 'என் கோ (Touch 'n Go Sdn Bhd) நிறுவனத்தால் சந்தைப் படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் இது பிளஸ் அட்டைக்கு (PLUS TAG) மாற்று அட்டையாகவும் பயன்படுத்தப்பட்டது.
இசுமார்ட் அட்டையின் அறிவுசார் சொத்துரிமைகள் எப்கோன் (EFKON Gmbh) எனப்படும் ஆஸ்திரிய நிறுவனத்திற்குச் சொந்தமானவை.[2] எப்கோன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எல்முட் ரைடர், யூஇஎம் நிறுவனத்துடன் (UEM Group) இணைந்து அகச்சிவப்பு முன்னேற்ற தொழில்நுட்ப நிறுவனம் (Infrared Advance Technology Sdn Bhd) (IRAT) எனும் அமைப்பை உருவாக்கியவர் ஆவார்.
மானிய விலை
[தொகு]ஓர் இசுமார்ட் அட்டையின் தற்போதைய விலை யூனிட்டுக்கு RM 130 ஆகும். இராட் எனும் அகச்சிவப்பு முன்னேற்ற தொழில்நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஒவ்வோர் இசுமார்ட் அட்டைகும் காப்புரிமைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே அதுவே ஒரு மானிய விலையாக வரையறுக்கப்பட்டு உள்ளது.
இசுமார்ட் அட்டையைப் பயன்படுத்துவதன் மூலமாக வாகன ஓட்டுநர்கள், இசுமார்ட் அட்டைப் பயன்பாட்டிற்கான சிறப்புப் பாதைகளில் தங்கள் வாகனங்களைத் தங்கு தடையின்றி ஓட்டிச் செல்லவும், நிற்காமல் சுங்கக் கட்டணத்தைச் செலுத்தவும் முடிகிறது. இந்த முறைமை ஒரு மணி நேரத்திற்கு 1,200 வாகனங்களைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TERAS Teknologi Sdn. Bhd. Toll Collection System | Teras Teknologi Sdn Bhd, New Klang Valley Expressway, SS7, 47301 Petaling Jaya, Selangor, Malaysia". TERAS New Website (in ஆங்கிலம்). Retrieved 2 November 2025.
- ↑ "EFKON Asia was established in 1994 and is based in Kuala Lumpur, Malaysia". www.efkon.com (in ஆங்கிலம்). Retrieved 2 November 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- Touch 'n Go
- Teras Teknologi Sdn Bhd பரணிடப்பட்டது 25 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம் – website of developer, manufacturer of SmartTAG.
- Nusajaya – developer of Iskandar Puteri