இசுபாட்டன் இராணுவம்
இசுபாட்டன் இராணுவம் | |
---|---|
சித்தரிக்கப்பட்ட இசுபாட்டன் இராணுவ வீரன். சிலநேரங்களில் போரின்போது சிவப்பு நிற மேலங்கியினை உடுத்திக் கொள்வதுண்டு[1] | |
செயற் காலம் | கி.மு. 6 - 4ம் நூற்றாண்டு |
நாடு | எசுபார்த்தா |
கிளை | இசுபாட்டன் கடற்படை |
வகை | தரைப்படை |
பொறுப்பு | இசுபாட்டாவைப் பாதுகாத்தல், பாதுகாப்புச் செயற்பாடுகள் |
குறிக்கோள்(கள்) | உன்னுடைய கேடயத்துடன் திரும்பு அல்லது அதனுடன் இரு [2] |
ஆண்டு விழாக்கள் | கயசிந்தியா, கார்னேயா, ஜிம்னோபதியா |
சண்டைகள் | றோய்யன் போர் கொரிந்தியப் போர் |
படைத்துறைச் சின்னங்கள் | |
இசுபாட்டன் கேடயம் |
இசுபாட்டன் இராணுவம் (Spartan army) பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய நகர அரசுகளில் ஒன்றாகிய இசுபாட்டாவின் படைத்துறை ஆகும். இசுபாட்டா அரசின் மையமாகக் இப்படைத்துறை காணப்பட்டது. இசுபாட்டா குடிமகனின் முக்கிய கடமை சிறந்த போர்வீரனாக இருப்பதாகும்.[3] சிறு பராயத்திலிருந்தே படைத்துறை பயிற்சிபெற்றமை, இசுபாட்டன் உலக வரலாற்றில் மிக அச்சமூட்டும் படைகளில் ஒன்றாகத் திகழக் காரணமாகியது. பாரசிகத்துக்கு எதிரான போர்களில் புகழ்பெற்ற அந்தஸ்தைப் பெற்றனர். கி.மு. 6 முதல் 4 நூற்றாண்டுகள் வரையான காலம் இசுபாட்டன்களின் செல்வாக்கு மிகுந்த காலமாகவும், "ஒரு இசுபாட்டன் மற்ற அரசுகளின் சில வீரர்களுக்குச் சமம்" என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.[3] பேரரசர் அலெக்சாந்தர் எசுபார்த்தாவின் மிகப்பெரிய அபிமானியாக இருந்தார். மேலும் அவர் அவர்களை தனது இராணுவத்தில் சேரும்படி கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை, ஏனெனில் அவர் அவர்களின் சட்டத்தையும் அவர்களின் முடிவுக்குப் பின்னால் உள்ள புனிதமான காரணத்தையும் அறிந்திருந்தார். எசுபார்டான்கள் சமூகத்திற்கு தனிநபரை கிட்டத்தட்ட மொத்தமாக அடிபணிய வைக்கும் அரசியலமைப்பை உருவாக்கியிருந்தனர்.
அரை தொன்மவியலின்படி எசுபார்டன் சட்டங்களை உருவாக்கியவரான லைகர்கசு முதன்முதலில் இந்த சிறந்த இராணுவத்தை நிறுவினார்.[4] எசுபார்டாவானது "செங்கற்களுக்குப் பதிலாக மனித சுவர்" சூழ்ந்திருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஆண் குடிமக்களுக்கான சமத்துவம், சிக்கனம், வலிமை, உடற்தகுதி போன்ற "சரியான நற்பண்புகளை" பின்பற்றி இராணுவ மயமான வாழ்க்கை முறையை உருவாக்க எசுபார்டன் சமூகத்தை சீர்திருத்த முன்மொழிந்தார். எசுபார்டன் சமூகத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாதவர்களுக்கு இடமில்லாததால், பலவீனமான அல்லது ஊணமுற்றதாக கருதப்படும் எந்தவொரு குழந்தையும் டெய்கெட்டஸ் மலையில் இறக்கும்படி விடப்பட்டது. (பிறந்தவுடன் குழந்தைகளை தூக்கி எறியும் வழக்கம் ஏதென்சிலும் இருந்தது.) எந்த குழந்தை வாழலாம் அல்லது இறக்கலாம் என்பதை எசுபார்டன் பெரியவர்கள் தீர்மானித்தனர். திடகார்த்தமான குழந்தை அதன் தாயாரிடம் ஒப்படைக்கப்படும். எசுபார்டியேட் சிறுவர்கள் 7 வயதுவரை தாயாரின் பராமரிப்பில் இருக்கும். ஏழுவயதில் அகேஜ் என்னும் இராணுவப் பயிற்சிக்கு அனுப்பப்படுவர். அங்கு இளம் சிறுவர்கள் தீவிரமான மற்றும் கடுமையான இராணுவப் பயிற்சியை மேற்கொள்வர்.[5] 30 வயதிற்குள் அகோஜியில் தேர்ச்சி பெற்றவர்கள் முழு எசுபார்டன் குடியுரிமையைப் பெறுகின்றனர். பயிற்சியை முடித்து வருபவன் உலகில் இதுவரை கண்டிராத கடினமான மற்றும் மிகவும் ஒழுக்கமான போர்ப் படையில் தனது இடத்தைப் பிடிக்கத் தயாராக இருந்தான். எசுபார்டன் உயரடுக்கு அவர்களின் சுதந்திரத்தில் உணர்ச்சியுடன் நம்பிக்கை கொண்டிருந்தது. மேலும் சிறு வயதிலேயே அவர்களின் கடமை உணர்வு, எந்த எசுபார்டான் தளபதியும் தனது வீரர்களை போரில் முன்நகர்த்த சாட்டைகளை சொடுக்க வேண்டியதில்லை என்று உத்தரவாதம் அளித்தது.
குறிப்பு
[தொகு]- ↑ Warrior in the Classical World pg. 47
- ↑ "Со щитом или на щите ". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
- ↑ 3.0 3.1 Connolly (2006), p. 38
- ↑ Plutarch, The Life of Lycurgus (written 75, trans. John Dryden 9999), The Internet Classics Archive பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Hodkinson, Stephen (1996). "Agoge". In Hornblower, Simon (ed.). Oxford Classical Dictionary. Oxford: Oxford University Press.