உள்ளடக்கத்துக்குச் செல்

இசுட்ரோன்சியம் புளோரோகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம் புளோரோகுளோரைடு
Strontium fluorochloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
இசுட்ரோன்சியம் புளோரைடு குளோரைடு, இசுட்ரோன்சியம் புளோரோ-குளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/ClH.FH.Sr/h2*1H;/q;;+2/p-2
    Key: MKHLNMLOOQGRBL-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159591500
  • [F-].[Cl-].[Sr+2]
பண்புகள்
SrFCl
தோற்றம் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
புறவெளித் தொகுதி P4/mmm
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

இசுட்ரோன்சியம் புளோரோகுளோரைடு (Strontium fluorochloride) என்பது SrFCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் புளோரைடு குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இசுட்ரோன்சியம், புளோரின், குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3][4]

தயாரிப்பு

[தொகு]

இசுட்ரோன்சியம் புளோரைடுடன் இசுட்ரோன்சியம் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து இசுட்ரோன்சியம் புளோரோகுளோரைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[5]

SrF2 + SrCl2 -> 2SrFCl

இயற்பியல் பண்புகள்

[தொகு]

இசுட்ரோன்சியம் புளோரோகுளோரைடு சேர்மம் நாற்கோணவமைப்பில் , மேட்லாக்கைட்டு-வகை PbFClகட்டமைப்புடன் P4/mmm என்ற இடக்குழுவில் படிகங்களாக உருவாகிறது.[6]

பயன்கள்

[தொகு]

ஒளிக்கதிர் சிகிச்சை, அழுத்தம் மற்றும் வெப்பநிலை உணர்தல் போன்ற பயன்பாடுகளிலும், பிற சேர்மங்களைப் பெறுவதற்கான முன்னோடியாகவும் இதன் ஆற்றலுக்காகவும் இசுட்ரோன்சியம் புளோரோகுளோரைடு சேர்மம் அறியப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rodnyi, Piotr A. (30 May 1997). Physical Processes in Inorganic Scintillators (in ஆங்கிலம்). CRC Press. p. 148. ISBN 978-0-8493-3788-8. Retrieved 16 July 2025.
  2. Itoh, Noriaki; Stoneham, Marshall (2001). Materials Modification by Electronic Excitation (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 145. ISBN 978-0-521-55498-5. Retrieved 16 July 2025.
  3. Indian Journal of Pure & Applied Physics (in ஆங்கிலம்). Council of Scientific & Industrial Research. 1976. p. 702. Retrieved 16 July 2025.
  4. Liu, Guokui; Jacquier, Bernard (29 January 2006). Spectroscopic Properties of Rare Earths in Optical Materials (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 511. ISBN 978-3-540-28209-9. Retrieved 16 July 2025.
  5. Lieth, R. M. A. (29 June 2013). Preparation and Crystal Growth of Materials with Layered Structures (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 47. ISBN 978-94-017-2750-1. Retrieved 16 July 2025.
  6. Song, K. S.; Williams, Richard T. (8 March 2013). Self-Trapped Excitons (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 359. ISBN 978-3-642-85236-7. Retrieved 16 July 2025.
  7. Zhao, Xinyu; Yu, Qi; Yuan, Jun; V. Thakor, Nitish; Chee Tan, Mei (2020). "Biodegradable rare earth fluorochloridenanocrystals for phototheranostics" (in en). RSC Advances 10 (26): 15387–15393. doi:10.1039/D0RA00760A. பப்மெட்:33014350. Bibcode: 2020RSCAd..1015387Z.