இசுட்டான்டன் சதுரங்கத் தொகுதி
Appearance
இசுட்டான்டன் சதுரங்கத் தொகுதி என்பது, சதுரங்கம் விளையாடுவதற்கான காய்களின் குறிப்பிட்ட ஒரு வகையை உள்ளடக்கிய தொகுதி. சதுரங்க விதிகளின்படி போட்டிகளில் இவ்வகையையே பயன்படுத்தப்பட வேண்டும். நத்தானியேல் குக் என்பவர் வடிவமைத்த இவ்வகைக் காய்களுக்கு ஹோவார்ட் இசுட்டான்டன் என்பவரின் பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. முதல் 500 தொகுதிகள் இசுட்டான்டனின் கைப்படக் கையப்பமிட்டு எண்ணிடப்பட்டது.[1] 1849 ஆம் ஆண்டில் "ஜாக் ஆஃப் லண்டன்" நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இது விரைவிலேயே சதுரங்க விளையாட்டுக்கான தரமாகிவிட்டது. அன்றிலிருந்து இது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பயன்படத் தொடங்கியது.[2]