இசுடெர்லிங்
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1986 |
நிறுவனர்(கள்) | ஆர். சுப்ரமணியன் |
முதன்மை நபர்கள் | இரமேஷ் ராமநாதன் & விக்ரம் லால்வாணி |
தொழில்துறை | விடுமுறை, உல்லாச விடுதி |
உற்பத்திகள் | ஓய்வுநேரப் பயணம், நேரப் பகிர்வு, விடுமுறை உரிமை, , பெருநிறுவன பயணம், சாகச விடுமுறை நாட்கள் |
தாய் நிறுவனம் | இசுடெர்லிங் விடுமுறை உல்லாசவிடுதி நிறுவனம் |
இணையத்தளம் | www |
இசுடெர்லிங் விடுமுறை ஓய்வு விடுதி நிறுவனம் (Sterling Holiday Resorts Limited)(இசுடெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் லிமிடெட்-இசுடெர்லிங் என அழைக்கப்படுகிறது), என்பது விடுமுறை விடுதிகளைக் கொண்டுள்ள நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1986ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில், இசுடெர்லிங் விடுமுறை ஓய்வு விடுதி இந்தியா நிறுவனம், தாமசு குக் இந்திய நிறுவனத்திலிருந்து 100% தன்னாட்சியுடன் கூடிய துணை நிறுவனமாக மாறியது.
இசுடெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் லிமிடெட், நேச்சர் டிரெயில்ஸ் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்-ஐ வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அக்டோபர் 2015-ல் கையெழுத்திட்டது - இது மகாராட்டிராவில் 4 இடங்களில் உல்லாச விடுதிகளை இயக்கும் ஒரு சாகச விடுமுறை நிறுவனமாகும். நிறுவனம் மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[1]
ஆர். சி. ஐ. குழுவுடன் இணைந்து இசுடெரிலிங் உலகளவில் 4600 இணைந்த விடுதிகளையும் இந்தியாவில் 110 விடுதிகளையும் கொண்டுள்ளது. இதனை அனைத்திந்திய உல்லாச விடுதி மேம்பாட்டுக் கழகம் அங்கீகரிக்கத்துள்ளது.[2]
வரலாறு
[தொகு]இசுடெர்லிங் 1986-ல் இந்தியாவின் சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் ஓய்வு விடுதியான லேக் வியூ கொடைக்கானலில் திறக்கப்பட்டது (இந்த விடுமுறை விடுதி சமீபத்தில் கோடை - பை தி லேக் என மறுபெயரிடப்பட்டது). இசெடெர்லிங் ஆலிடேசு 1988ஆம் ஆண்டில் 11 ஓய்வு விடுதிகளுடன் விரிவடைந்தது. 2010ஆம் ஆண்டில், இந்நிறுவனம் தனது வணிகப் பெயரை இசுடெர்லிங் ரிசார்ட்சிலிருந்து இசுடெர்லிங் ஆலிடேசு என்று மாற்றியது.[3]
இந்நிறுவனம் இன்று 29 இடங்களில் 110 விடுமுறை விடுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் புதிதாக பல விடுதிகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.[4]
ஓய்வு விடுதிகள்
[தொகு]இசுடெர்லிங் கட்டமைப்பின் வலைப்பின்னலில் உள்ள ஓய்வு விடுதிகள் இந்தியா முழுவதும் தற்பொழுது உள்ளன. இவை:
- இசுடெர்லிங் லேக் பேலசு - ஆலப்புழா
- இசுடெர்லிங் படகு இல்லம் - ஆலப்புழா
- இசுடெர்லிங் ஆனைக்கட்டி, வடகோட்டதாரா
- இசுடெர்லிங் கார்பெட்
- இசுடெர்லிங் டார்ஜீலிங்
- இசுடெர்லிங் கேங்டாக் - ஆரஞ்சு கிராமம்
- இசுடெர்லிங் ருத்ரா கிர்
- இசுடெர்லிங் கோவா வர்கா
- இசுடெர்லிங் குருவாயூர்
- இசுடெர்லிங் காலிம்போங்
- இசுடெர்லிங் கன்கா
- இசுடெர்லிங் கார்வார்
- இசுடெர்லிங் கோடை - ஏரி
- இசுடெர்லிங் கோடை - பள்ளத்தாக்கு
- இசுடெர்லிங் குப்ரி
- இசுடெர்லிங் லோணாவ்ளா
- இசுடெர்லிங் மதுரை
- இசுடெர்லிங் மணாலி
- இசுடெர்லிங் அபு மலை
- இசுடெர்லிங் மூணார்
- இசுடெர்லிங் முசோரி
- இசுடெர்லிங் நைனித்தால்
- இசுடெர்லிங் உதகமண்டலம் - ஏல மலைகள்
- இசுடெர்லிங் ஊட்டி - பெர்ன் ஹில்
- இசுடெர்லிங் பதம் பென்ச்
- இசுடெர்லிங் பலவெல்லி கோதாவரி
- இசுடெர்லிங் புரி
- இசுடெர்லிங் ரிசிகேசு
- இசுடெர்லிங் சரிஸ்கா
- டி லைலா படகு இல்லம் சிறிநகர்
- இசுடெர்லிங் தேக்கடி
- இசுடெர்லிங் அருணை அனந்த திருவண்ணாமலை
- இசுடெர்லிங் வயநாடு
- இசுடெர்லிங் ஏலகிரி
- இசுடெர்லிங் ஏற்காடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sterling Holiday Resorts Inks Pact to Acquire Nature Trails". NDTV Profit. 26 October 2015 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304060930/http://profit.ndtv.com/news/corporates/article-sterling-holiday-resorts-inks-pact-to-acquire-nature-trails-1236656.
- ↑ "AIRDA: All India Resort Development Association". www.airda.org.
- ↑ "story". www.afaqs.com. Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
- ↑ Rout, Hemant Kumar (9 May 2018). "Sterling's theme-based holiday resorts offer unexpected surprises to visitors". The New Indian Express. http://www.newindianexpress.com/business/2018/may/09/sterlings-theme-based-holiday-resorts-offer-unexpected-surprises-to-visitors-1812174.html. பார்த்த நாள்: 17 September 2018.
- ↑ "Best Luxury Resorts and Hotels _ Weekend Getaways in India - Sterling Holidays". www.sterlingholidays.com.