இசுடுட்சாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
STUDSAT.jpg

ஸ்டுட்சாட் (STUDSAT) என்பது மாணவர்களின் செயற்கைக்கோள்; இது இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் பீகோ-செயற்கைக்கோள் ஆகும். கர்நாடக, ஆந்திர மாநிலப் பொறியியல் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டுட்சாட் 1 கிகி-இற்கும் குறைவான நிறையே உடையது.

முதன்மை நோக்கங்கள்[தொகு]

 • கல்வி நிறுவனங்களில் விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பரப்புதல்
 • சிறு செயற்கைக்கோள்களின் ஆய்வு-மேம்பாட்டை ஊக்கப்படுத்துதல்
 • செயற்கைக்கோளிற்கும் தரை நிலையத்திற்கும் ஒரு தொடர்பிணைப்பை ஏற்படுத்துதல்
 • 90 மீ பிரிதிறனுடன் புவியைப் படமெடுத்தல்
 • தள்ளுசுமை, தொலைத்தொடர்பு பற்றிய தகவல்களைத் தரை நிலையத்திற்கு அனுப்புதல்

சில தகவல்கள்[தொகு]

 • இது 630 கிமீ குத்துயரத்தில் இயங்குகிறது; இதன் சுற்றுப்பாதை கதிரவ-ஒத்தியங்குத் துருவப்பாதை ஆகும்.

கூட்டமைப்புக் கல்லூரிகள்[தொகு]

இத்திட்டத்திற்கு நிதியுதவியும் மாணவர்களையும் அளித்த கல்லூரிகள் பின்வருமாறு:

 • நிட்டீ மீனாக்ஷி தொழில்நுட்ப நிலையம் [Nitte Meenakshi Institute of Technology], பெங்களூரு.
 • எம். எசு. ராமையா தொழில்நுட்ப நிலையம் [M.S. Ramaiah Institute of Technology], பெங்களூரு.
 • ராஷ்ட்ரீய வித்யாலயா பொறியியல் கல்லூரி [Rashtriya Vidyalaya College of Engineering], பெங்களூரு.
 • பி.எம்.எசு. தொழில்நுட்ப நிலையம் [B.M.S. Institute of Technology], பெங்களூரு.
 • சைதன்ய பாரதி தொழில்நுட்ப நிலையம் [Chaitanya Bharathi Institute of Technology], ஐதராபாது.
 • வானூர்திப் பொறியியல் நிலையம் [Institute of Aeronautical Engineering], ஐதராபாது.
 • விஞ்ஞான் தொழில்நுட்ப-அறிவியல் நிலையம் [Vignan Institute of Technology&Science], ஐதராபாது.

குறிப்புதவி[தொகு]

படிமம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடுட்சாட்&oldid=3363637" இருந்து மீள்விக்கப்பட்டது