உள்ளடக்கத்துக்குச் செல்

இசுடீவன் ஆல்ஃபோர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுடீவன் ஆல்ஃபோர்டு (Stephen Alford, பிறப்பு: 1970) என்பவர் பிரித்தானிய வரலாற்றாளரும், பேராசிரியரும் ஆவார். இவர் 2012 முதல் லீட்சு பல்கலைக்கழகத்தில் தொடக்ககால நவீன பிரித்தானிய வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் (1997–99) பிரித்தானியக் கல்விக்கழகத்தின் முதுநிலைப் ஆய்வாளராகவும், கேம்பிரிட்சு பிட்சுவில்லியம் கல்லூரியில் இளநிலை ஆய்வாளராகவும் பணியாற்றினார். 1999 முதல் 2012 வரை கேம்பிரிட்சு கிங்சு கல்லூரியில் வரலாற்றுத் துறை ஆய்வாளராகவும் இருந்துள்ளார்.[1] 2000 ஆம் ஆண்டு முதல் அரச வரலாற்றியல் கழகத்தில் இணைந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile - Faculty of Arts - University of Leeds - Stephen Alford". Leeds.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.
  2. "Faculty of Arts, Humanities and Cultures". பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீவன்_ஆல்ஃபோர்டு&oldid=3630597" இலிருந்து மீள்விக்கப்பட்டது