இசுடான்லி கோரென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடான்லி கோரென்

இசுடான்லி கோரென் (Stanley Coren) 1942) என்பவர் அமெரிக்காவின் மனவியல் பேராசிரியர் மற்றும்  நரம்பியல் சார் மனவியல் ஆய்வாளர் ஆவார்.[1]  மனித நுண்ணறிவு, மனத்தின் இயல்புகள், திறன்கள் மற்றும் நாய்களைப் பற்றிய வரலாறு ஆகியன தொடர்பான நூல்கள் எழுதியுள்ளார். அந்த நூல்கள் விருதுகளும் பெற்றுள்ளன. கனடா, அமேரிக்கா மற்றும் பிற வெளி நாடுகளில் இவரது தொலைக்காட்சி உரையாடல்கள், பேச்சுக்கள் பிரபலமானவை. சைக்காலஜி டுடே  என்ற இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். 

கல்வியும் கற்பித்தலும்[தொகு]

இசுடான்லி கோரேன் அமெரிக்காவில், பென்னிசில்வேனியா மாநிலத்தில், பிளாடல்பியாவில் பிறந்தார். பென்னிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துப் பின்னர் இசுடான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

நியூயார்க்கில் சமூக ஆய்வுப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பின்னர் 1973 இல் பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகவும் மனித நரம்பியல் மனவியல் ஆய்வுக் கூடத்தில் இயக்குநராகவும் இருந்தார். பெர்கின் பல்கலைக் கழகத்தில் நாய்கள் ஆய்வுத் துறையில் பேராசிரியராக உள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

இடக்கைப் பழக்கம் இயற்கையாக ஏற்படுவது பற்றியும், அதன் காரணங்கள், விளைவுகள், இன்னல்கள் போன்றவற்றைப் பற்றி எழுதி முதல் நூலாக வெளியிட்டார்.[2] உறக்கம் பற்றிய ஒரு நூல் எழுதினார். உறக்கத்தின் தேவை, இன்றியமையாமை, உறக்கமின்மையால் ஏற்படும் பொல்லாங்குகள் ஆகியன பற்றி ஆய்வு செய்து ஒரு நூல் எழுதினார். நாய்களின் நுண்ணறிவு என்னும் தலைப்பில் நாய்கள் குறித்து ஒரு நூல் 1994 இல் இவரால் எழுதப் பெற்று பன்னாட்டு அளவில் பேர் பெற்றது.[3] 16 பதிப்புகள் இந்தப் புத்தகம் கண்டது. 26 மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப் பட்டது. இன்னும் பல நூல்கள் நாய்களைப் பற்றி இசுடான்லி கோரேன் எழுதினார். இந்த நூல்களுக்குப் பல விருதுகள் கிடைத்தன.

இதழ்கள் வழி எழுத்துப் பணிகள்[தொகு]

மனித மன இயல்புகள், ஆற்றல்கள், மனித உறக்கம் பற்றிய நூல்களும், நாய்கள் பற்றிய நூல்களும் இவர் எழுதியவை 20 க்கும் மேல் இருக்கும். நூல்கள் மட்டும் அல்லாமல் மாடர்ன் டாக் மற்றும் அனிமல் சென்ஸ் போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். சைக்காலஜி டுடே என்ற இணையத் தளத்திலும் எழுதி வருவதால், அந்தப்  பணி ஒரு சிறந்த கல்வி பரப்பல் என்று பாராட்டி விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடான்லி_கோரென்&oldid=2938139" இலிருந்து மீள்விக்கப்பட்டது