இசுடசி கிப்ளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுடசி ஆன்-மேரி கிப்ளர் (Stacy Ann-Marie Keibler பிறப்பு: அக்டோபர் 14, 1979) ஒரு அமெரிக்க நடிகை, நடனக் கலைஞர் மற்றும் வடிவழகி, அத்துடன் முன்னாள் உற்சாகமூட்டும் பெண்மணி மற்றும் ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார், குறிப்பாக உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் மற்றும் உலக மல்யுத்த பொழுதுபோக்குகளில் கலந்துகொண்டதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.

கீப்லர் டான்சிங் வித் தி ஸ்டார்ஸில் ஒரு போட்டியாளராக இருந்தார் அதன் இரண்டாம் பருவத்தில், இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[1] வாட் அபவுட் பிரையன், ஜார்ஜ் லோபஸ் மற்றும் அக்டோபர் ரோட் போன்ற பிற ஏபிசி தொடர்களிலும், சிபிஎஸ் சிட்காம் ஹவ் ஐ மெட் யுவர் மதரின் 100 வது நிகழ்ச்சியிலும் யுஎஸ்ஏ நெட்வொர்க் ஷோ நிகழ்ச்சியான சைக் என்பதிலும் இவர் தோன்றியுள்ளார் . கீப்லர் மாதிரியாகவும், மாக்சிம் மற்றும் ஸ்டஃப் பத்திரிகைகளில் தோன்றினார்.[2][3]

டபிள்யூ சி டபிள்யூவில் நைட்ரோ கேர்ள்ஸின் ஒருவராக தனது தொழில்முறை மல்யுத்த வாழ்க்கையைத் தொடங்கினார்.[4][5] மிஸ் ஹான்காக் என்ற பெயரில் இவர் நிறுவனத்தின் மேலாளராக இவர் பரவலாக அறியப்பட்டார். இவர் டேவிட் பிளேயருடனான உறவு மற்றும் கர்ப்பம் போன்றவைகளினால் பெயர் பெற்றவர்.[6][7] 2001 ஆம் ஆண்டில் டட்லி என்பவருக்கு மேலாளராக இருந்தார்.பின்னர் ஸ்காட் ஸ்டெய்னர் என்பவருக்கும் மேலாளராக இருந்தார். 2006 ஆம் ஆண்டில் தெ ஹரிகேன் மற்றும் ரோசி ஆகியோருடன் இணைந்து விளையாடினார். அப்போது சூபர் ஸ்டேசி எனும் பெயரில் அழைக்கப்பட்டனர்.[8]

கீப்லர் ஒரு பாலியல் சின்னமாக கருதப்படுகிறார் மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீண்ட கால்களுக்கு பெயர் பெற்றவர்.[2][4][5] இவர் "டபிள்யூ சி டபிள்யூவில் கால்கள்" மற்றும் "உலக மகிழ்கலை மற்போர் நிறுவனத்தின் கால்கள் என அறியப்படுகிறார். டான்சிங் வித் தி ஸ்டார் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த புருனோ டோனியோலி தனது நீண்ட கால்கள் காரணமாக அவளுக்கு "வெகுஜன மயக்கத்தின் ஆயுதம்" என்று செல்லப்பெயர் சூட்டினார் .[7]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஸ்டேசி ஆன்-மேரி கீப்லர் அக்டோபர் 14, 1979 அன்று மேரிலாந்தின் ரோசடேலில் பாட்ரிசியா மற்றும் கேரி கீப்லரின் மகளாகப் பிறந்தார்.[4][9] தனது மூன்றாவது வயதில் , மேரிலாந்தின் டண்டல்கில் உள்ள ஜீன் கெட்டல் ஸ்டுடியோ ஆஃப் டான்ஸில் கீப்லர் பாலே, ஜாஸ் மற்றும் டேப் டான்சிங் போன்ற வகுப்புகளில் கலந்துகொண்டார். இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்புக்காக ரோசடேலில் உள்ள செயின்ட் கிளெமென்ட் மேரி ஹோஃபாவர் பள்ளிக்குச் சென்றார்.1990 ஆம் ஆண்டில், ஸ்டேசி மிஸ் மேரிலேண்ட் ப்ரீ-டீன் என்ற பட்டத்தை வென்றார். தேசிய இளம் பெண் பட்டம் வென்றார். அனைத்து பெண்கள் பள்ளியான பால்டிமோர் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, டோவ்ஸன் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு இவர் வெகுஜன தகவல்தொடர்பு பிரிவில் கல்வி பயின்றார்.[5] இவர் ஒரு பகுதி உதவித் தொகையுடன் பல்கலைக்கழகத்தில் பயின்றார் மற்றும் 3.7 கிரேடு புள்ளி சராசரி (ஜிபிஏ) பெற்றார்.[10] பெக்கர் மற்றும் லிபர்ட்டி ஹைட்ஸ் போன்ற திரைப்படங்களிலும், சிறிய வடிவழகு வேலைகளிலும் ஈடுபட்டார் [4] கீப்லர் 18 வயதில் பால்டிமோர் ரேவன்ஸ் கால்பந்து அணிக்கு ஒரு உற்சாகமளிக்கும் பெண்ணாக இருந்தார் .

சான்றுகள்[தொகு]

  1. "Cast Bio: Stacy Keibler (archived June 15, 2007)". ABC.com. Archived from the original on 2007-06-15. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
  2. 2.0 2.1 "Hot 100: Stacy Keibler". Maxim. 2006. Archived from the original on 2007-12-11. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
  3. Keibler, Stacy (2006-02-06). "Getting Fit with Stacy Keibler". Stuff Magazine. Archived from the original on 2006-03-21. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
  4. 4.0 4.1 4.2 4.3 "Revealing Stacy Keibler Interview". steppinoutmagazine. 2005-07-26. Archived from the original on 2012-09-30. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10. பிழை காட்டு: Invalid <ref> tag; name "reveal" defined multiple times with different content
  5. 5.0 5.1 5.2 Blackburn, Maria. "'Skye' is no limit for new WCW Nitro Girl". The Baltimore Sun.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "skye" defined multiple times with different content
  6. Eck, Kevin. "From a dancer to a Duchess". Wrestling Digest. 
  7. 7.0 7.1 "Stacy Keibler's profile". Online World of Wrestling. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
  8. Reynolds, R. D. (2007). The WrestleCrap Book of Lists!. ECW Press. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55022-762-8. https://archive.org/details/wrestlecrapbooko0000reyn. 
  9. Eck, Kevin. "What about Stacy?".
  10. "Got Legs?". Muscle & Fitness இம் மூலத்தில் இருந்து 2008-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081015004511/http://findarticles.com/p/articles/mi_m0801/is_1_66/ai_n8583379. பார்த்த நாள்: 2008-03-06. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடசி_கிப்ளர்&oldid=3843480" இலிருந்து மீள்விக்கப்பட்டது