உள்ளடக்கத்துக்குச் செல்

இசுக்காண்டியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுக்காண்டியம் புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுக்காண்டியம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13709-47-2 N
EC number 237-555-4
InChI
  • InChI=1S/3FH.Sc/h3*1H;/q;;;+3/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83678
வே.ந.வி.ப எண் VQ8930000
  • [Sc+3].[F-].[F-].[F-]
பண்புகள்
ScF3
வாய்ப்பாட்டு எடை 101.95112 கி/மோல்
தோற்றம் பிரகாசமான வெண்ணிறத் தூள்
அடர்த்தி 2.53 கி/செமீ3
உருகுநிலை 1,552 °C (2,826 °F; 1,825 K)[2]
கொதிநிலை 1,607 °C (2,925 °F; 1,880 K)[2]
5.81×10−24[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், Pm3m
புறவெளித் தொகுதி Pm3m, No. 221
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இசுக்காண்டியம்(III) குளோரைடு
இசுக்காண்டியம் புரோமைடு
இசுக்காண்டியம் மூவயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இட்ரியம்(III) புளோரைடு
லியுதேத்தியம்(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)

இசுக்காண்டியம்(III) புளோரைடு (Scandium(III) fluoride) (ScF3) என்பது ஒரு அயனிச் சேர்மமாகும். இந்த உப்பு நீரில் இலேசாகக் கரையக்கூடியது, ஆனால் அதிகப்படியான புளோரைடு முன்னிலையில் கரைந்து ScF6 எதிர்மின் அயனியை உருவாக்குகிறது.

இசுக்காண்டியம் மற்றும் புளோரின் ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் SCF3 ஐ உருவாக்க முடியும்.[3] உயர் வெப்பநிலையில் தோர்ட்வெய்தைட்டு தாதுவிலிருந்து இசுக்காண்டியத்தைப் பிரித்தெடுக்கும் செயல்முறையின் போது, Sc2O3 உடன் அமோனியம் பைஃபுளோரைடை வினைபுரியச் செய்வதன் மூலமும் இச்சேர்மம் உருவாகிறது.[4]

Sc2O3 + 6 NH4HF2 → 2 ScF3 + 6 NH4F + 3 H2O

இதன் விளைவாக வரும் கலவையில் பல உலோக புளோரைடுகள் உள்ளன, மேலும் இது அதிக வெப்பநிலையில் கால்சியம் உலோகத்துடன் வினைபுரிவதால் ஒடுக்கப்படுகிறது.[4] பயன்படுத்தக்கூடிய உலோக இசுக்காண்டியத்தை உற்பத்தி செய்ய மேலும் சுத்திகரிப்பு படிநிலைகள் தேவைப்படுகின்றன .[4]

பண்புகள்

[தொகு]

இசுக்காண்டியம் முப்புளோரைடு எதிர்மறை வெப்ப விரிவாக்கத்தின் அசாதாரணப் பண்பை வெளிப்படுத்துகிறது, அதாவது வெப்பமடையும் போது அது சுருங்குகிறது. இந்த நிகழ்வு புளோரைடு அயனிகளின் நான்காம்படி அலைவு மூலம் விளக்கப்படுகிறது. புளோரைடு அயனியின் வளைவு திரிபில் சேமிக்கப்பட்ட ஆற்றல் இடப்பெயர்ச்சி கோணத்தின் நான்காவது அடுக்கிற்கு நேர் விகிதத்தில் இருக்கும், ஏனைய பெரும்பாலான பொருட்களில் இது இடப்பெயர்ச்சியின் இரண்டாம் படிக்கு நேர் விகிதத்தில் இருக்கும். ஒரு புளோரின் அணுவானது இரண்டு இசுக்காண்டியம் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது, மேலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது புளோரின் அதன் பிணைப்புகளுக்கு செங்குத்தாக அதிகமாக அதிர்கிறது. இந்த இயக்கமானது இசுக்காண்டியம் அணுக்களை ஒட்டுமொத்தப் பொருளிலும் ஒன்றாக இழுக்கிறது, இதனால் அது சுருங்குகிறது.[5]

ScF3 இந்தப் பண்பை குறைந்தது 10 கெல்வின் முதல் 1100 கெல்வின் வரை காட்டுகிறது, அதற்கு மேல் இது சாதாரண நேர்மறை வெப்ப விரிவாக்கத்தைக் காட்டுகிறது; மேலும், இந்தப் பொருள் இந்த முழு வெப்பநிலை வரம்பிலும், சூழல்சார் அழுத்தத்தில் குறைந்தது 1600 கெல்வின் வரையிலும் கன சமச்சீர்மையைக் கொண்டுள்ளது. மிகக் குறைந்த வெப்பநிலைகளில் எதிர்மறை வெப்ப விரிவாக்கம் மிகவும் வலிமையாக உள்ளது. (60 மற்றும் 110 கெல்வின் இடையே வெப்ப விரிவாக்கக் குணகம் சுமார் -14 ppm/K).[6]  

சூழல் சார் அழுத்தங்களில் இசுக்காண்டியம் மூபுளோரைடு கனசதுர படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது, ஒரு உலோக நிலை காலியாக உள்ள பெரோவ்ஸ்கைட் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.[7] அலகு செல்லின் பரிமாணம் 4.01 Å ஆகும்.[7] அழுத்தத்தின் கீழ் இசுக்காண்டியம் மூபுளோரைடு செஞ்சாய்சதுர படிகக் கட்டமைப்பையும் மற்றும் 3 கிகா பாசுகல் அழுத்தத்திற்கு மேல் நான்முகி படிகக் கட்டமைப்பையும் உருவாக்குகிறது.[7] 

இசுக்காண்டியம் புளோரைடு (ScF3) புற ஊதா முதல் அகச்சிவப்பு வரை உள்ள அலைநீளங்களில் அதிக ஒளி ஊடுருவு தன்மை, குறைந்த ஒளியியல் உறிஞ்சுதல் மற்றும் குறைந்த ஒளிவிலகல் குறியீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[8][9] இது அதிர்வெண் மாற்றத்திற்கான நேரியல் அல்லாத ஒளியியல் பண்புகளை வெளிப்படுத்துகிறது. மேலும், அருமண் உலோக அயனிகளுடன் தோய்க்கும் போது ஒளிரும்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–189. ISBN 978-1138561632.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  3. S.A.Cotton, Scandium, Yttrium and the Lanthanides: Inorganic and Coordination Chemistry, Encyclopedia of Inorganic Chemistry, 1994, John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0.
  4. 4.0 4.1 4.2 Pradyot Patnaik, 2003, Handbook of Inorganic Chemicals, McGraw-Hill Professional, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
  5. Woo, Marcus (7 November 2011). "An incredible shrinking material: Engineers reveal how scandium trifluoride contracts with heat". Physorg. Retrieved 8 November 2011.
  6. Greve, Benjamin K.; Kenneth L. Martin; Peter L. Lee; Peter J. Chupas; Karena W. Chapman; Angus P. Wilkinson (19 October 2010). "Pronounced Negative Thermal Expansion from a Simple Structure: Cubic ScF3". Journal of the American Chemical Society 132 (44): 15496–15498. doi:10.1021/ja106711v. பப்மெட்:20958035. 
  7. 7.0 7.1 7.2 Aleksandrov, K. S.; V. N. Voronov; A. N. Vtyurin; A. S. Krylov; M. S. Molokeev; M. S. Pavlovskiĭ; S. V. Goryaĭnov; A. Yu. Likhacheva et al. (2009). "Pressure-induced phase transition in the cubic ScF3 crystal". Physics of the Solid State 51 (4): 810–816. doi:10.1134/S1063783409040295. பன்னாட்டுத் தர தொடர் எண்:1063-7834. Bibcode: 2009PhSS...51..810A. 
  8. Loewen, Eric. "Scandium Fluoride: Properties, Applications, and Future Prospects". Stanford Advanced Materials. Retrieved Oct 16, 2024.
  9. Karimov, Denis; Buchinskaya, Irina (2019). "Growth from the Melt and Properties Investigation of ScF3 Single Crystals". Crystals 9 (7): 371. doi:10.3390/cryst9070371. 
  10. Pang, Min; Feng, Jing (2013). "Phase-tunable synthesis and upconversion photoluminescence of rare-earth-doped sodium scandium fluoride nanocrystals". CrystEngComm (35): 6901-6904. doi:10.1039/C3CE40849C.