இசிக்-குல் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசிக்-குல் ஏரி
Issyk Kul.jpg
வானிலிருந்து தோற்றம், செப்டம்பர் 1992
ஆள்கூறுகள் 42°25′N 77°15′E / 42.417°N 77.250°E / 42.417; 77.250ஆள்கூற்று: 42°25′N 77°15′E / 42.417°N 77.250°E / 42.417; 77.250
ஏரி வகை வெளியேறு வழியில்லா
மலை ஏரி
மாறா வெப்ப
முதன்மை வரத்து பனியாறுகள்
முதன்மை வெளிப்போக்கு ஆவியாதல்
வடிநிலம் 15,844 square kilometres (6,117 சது மை)
வடிநில நாடுகள் கிர்கிஸ்தான்
அதிகபட்ச நீளம் 178 kilometres (111 mi)[1]
அதிகபட்ச அகலம் 60.1 kilometres (37.3 mi)[1]
மேற்பரப்பு 6,236 square kilometres (2,408 சது மை)[1]
சராசரி ஆழம் 278.4 metres (913 ft)[1]
அதிகபட்ச ஆழம் 668 metres (2,192 ft)[1][2]
நீர் அளவு 1,738 cubic kilometres (417 cu mi)[3][2]
நீர்தங்கு நேரம் ~330 years[2]
உவர்ப்புத் தன்மை 6g/L[1][2]
கரை நீளம்1 669 kilometres (416 mi)[1]
கடல்மட்டத்திலிருந்து மேற்பரப்பின் உயரம் 1,607 metres (5,272 ft)[1]
குடியேற்றங்கள் சொல்பொன்-அற்றா, காராக்கோல்
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

இசிக்-குல் ஏரி (கிர்கீசியம்: Ысык-Көл, உருசியம்: Иссык-Куль), கிர்கிஸ்தானில் உள்ள தியான் சான் மலையின் வடபகுதியில் உள்ள ஓர் ஏரி ஆகும். இது ஒரு நீர் வெளியேறும் வழியற்ற, மேலிருந்து கீழாக மாறா வெப்பநிலையைக் கொண்ட நீரையுடைய ஓர் ஏரி ஆகும். இது கொள்ளளவு அடிப்படையில் பத்தாவது பெரிய ஏரி ஆகும். அத்துடன், காஸ்பியன் கடலுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரி ஆகும். இது பனி மூடிய குன்றுகளால் சூழப்பட்டிருந்தாலும் இது ஒருபோதும் உறைவதில்லை.[4] இசிக்-குல் என்பது கிர்கீசிய மொழியில் இளஞ்சூடான ஏரி எனப் பொருள்படும்.

இந்த ஏரி உயிரியற் பல்வகைமையில் உலக முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் சாசனத்தினால் பாதுகாக்கப்படும் ஏரிகளுள் ஒன்றாகும்.

புவியியல் அமைவு[தொகு]

Southern shore of Issyk-Kul Lake
Map of Kyrgyzstan showing Issyk-Kul in the north

இசிக்-குல் ஏரியானது 182 kilometres (113 mi) நீளமும், 60 kilometres (37 mi) அகலமும் உடையது. இதன் பரப்பளவு 6,236 square kilometres (2,408 சது மை) ஆகும். இது தென்னமெரிக்காவில் உள்ள திதிகாகா ஏரிக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி ஆகும். இது 1,607 metres (5,272 ft) உயரத்தில் உள்ளதுடன் 668 metres (2,192 ft) ஆழமானது.[5]

ஏறத்தாழ 118 ஆறுகளும் ஓடைகளும் இவ்வேரியில் வந்து கலக்கின்றன. இவற்றுள் பெரியவை டிஜைர்காலன் மற்றும் டியூப் நதிகள் ஆகும்.

நிர்வாக ரீதியாக இது கிர்கிஸ்தானின் இசிக்-குல் பிரதேசத்திற்குட்பட்டது.

சுற்றுலா[தொகு]

சோவியத் ஒன்றிய காலத்தில், இது ஒரு பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்பட்டது. இதன் வடக்குக் கரையில், சொல்பொன்-அற்றா நகரைச் சூழ்ந்து பல இயற்கை மருத்துவக் கூடங்களும் விடுமுறை விடுதிகளும் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் பிரிவுக்குப் பின்னர் இவை அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவில்லை. எனினும் தற்போது மீண்டும் விடுதிகள் மீளமைக்கப்படுகின்றன.

இசிக்-குல் பிரதேசத்தின் நிர்வாக நகரான காராக்கோல் இவ்வேரியின் கிழக்கு முனையை அண்டி உள்ளது.

வரலாறு[தொகு]

தூர கிழக்குக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருந்த பழைமையான பட்டுப்பாதையில் இது ஒரு தரிப்பிடமாக இருந்தது. மதகுருவும் கல்வியிலாளருமான சீனப் பயணி சுவான்சாங், ஏழாம் நூற்றாண்டில் இந்த ஏரி வழியாகப் பயணம் மேற்கொண்டு அது குறித்த தகவல்களைத் தனது மேற்குப் பிரதேசங்கள் குறித்த பெரிய தாங் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த ஏரி சிங் அரசமரபின் உடைமையாக இருந்து பின்னர் உருசியாவிடம் கொடுக்கப்பட்டது. 14ஆம் நூற்றாண்டில் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவிய கறுப்புச் சாவு என்ற தொற்று நோயின் பிறப்பிடமாகப் பல வரலாற்றாய்வாளர்கள் இவ்வேரியையே கருதுகின்றனர்.[6] 1916 இல் இசிக்-குல்லில் உள்ள மடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதில் ஏழு பௌத்த துறவிகள் கொல்லப்பட்டனர்.[7]

சுற்றுச் சூழல்[தொகு]

கிர்கிஸ்தானின் முதலாவது பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக இசிக்-குல் பிரதேசம் இப்பிரதேசத்தின் இயற்கை வனப்பைப் பேணும் வகையிலும் அன்செரிபார்மஸ் பறவையினத்தைப் பாதுகாக்கும் வகையிலும் 1948இல் உருவாக்கப்பட்டது. 1975இல் இது ஒரு ராம்சார் சாசனப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.

பல இவ்வேரிக்கே உரிய மீன் இனங்களை இந்த ஏரி கொண்டுள்ளது. இவற்றுள் சில அருகிவரும் இனங்கள் ஆகும். ஆர்மேனியாவில் உள்ள செவான் ஏரிக்குரிய இனமான செவான் டிரௌட் என்ற மீனினம் 1970களில் இவ்வேரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செவான் ஏரியில் அருகி வரும் அதேவேளை இசிக்-குல் ஏரியில் நன்கு பரவியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Savvaitova, K.; Petr, T. (December 1992), "Lake Issyk-Kul, Kirgizia", International Journal of Salt Lake Research 1 (2): 21–46, doi:10.1007/BF02904361 
  2. 2.0 2.1 2.2 2.3 Hofer, Markus; Peeters, Frank; Aeschbach-Hertig, Werner; Brennwald, Matthias; Holocher, Johannes; Livingstone, David M.; Romanovski, Vladimir; Kipfer, Rolf (11 July 2002), "Rapid deep-water renewal in Lake Issyk-Kul (Kyrgyzstan) indicated by transient tracers", Limnology and Oceanography 4 (47): 1210–1216, doi:10.4319/lo.2002.47.4.1210, archived from the original on 4 March 2016, https://web.archive.org/web/20160304091201/http://aslo.org/lo/toc/vol_47/issue_4/1210.pdf 
  3. Kodayev, G.V. (1973), "Морфометрия озера Иссык-Куль" (in ru), News of the All-Union Geographic Society (Izvestiya VGO) 
  4. Nihoul, Jacques C.J.; Zavialov, Peter O.; Micklin, Philip P. (2012). Dying and Dead Seas Climatic Versus Anthropic Causes. Springer Science+Business Media. பக். 21. https://books.google.com/books?id=nGzsCAAAQBAJ&pg=PA21&dq=Issyk+Kul+never+freezes. பார்த்த நாள்: 4 December 2015. 
  5. International Lake Environment Committee Foundation Archived 2005-09-06 at the வந்தவழி இயந்திரம்.
  6. The Silk Route – Channel 4
  7. Islam in the Russian Federation and the Post Soviet Republics: a Historical perspective by Spyros Plakoudas, p. 10
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிக்-குல்_ஏரி&oldid=2526151" இருந்து மீள்விக்கப்பட்டது