இசா அபு இசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசா அப்துல் சலாம் அபு-இசா [1] ( அரபு மொழி: عيسى عبد السلام أبو عيسى;( பிறப்பு 20 செப்டம்பர் 1955) என்பவர் ஒரு கத்தாரின் வணிக அதிபர் ஆவார். அவர் சலாம் சர்வதேச முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அறுபது ஆண்டுகளாக கத்தாரின் மிகப்பெரிய மற்றும் சிறந்த நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார்.[2] பாரம்பரியமாக, கத்தாரின் முக்கிய குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த வணிக நிறுவனமான சலாம் [3] பொது பங்குதாரர் நிறுவனமாக மாறுவதற்கு இசா அபு-இசா வழிவகுத்தார்.[4] இது உள்நாட்டிலும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் இயங்குகிறது.

சலாம் சர்வதேச முதலீட்டு நிறுவனம் இப்பிராந்தியத்தின் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும், இது தோஹா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது கத்தாரி பங்குதாரர் நிறுவனமாகும். இது சமீபத்தில் ஃபோர்ப்ஸ் மத்திய கிழக்கு என்ற பத்திரிக்கையின் வாக்கெடுப்பில் சிறந்த 200 நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[5] .

கல்லூரி முடிந்தவுடன், இசா அபு-இசா தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு, கட்டுமானம் மற்றும் மேம்பாடு, சொகுசு மற்றும் நுகர்வோர் தயாரிப்புகள், எரிசக்தி மற்றும் தொழில், மற்றும் முதலீடுகள் மற்றும் அசையாச் சொத்து ஆகிய துறைகளில் 33 வணிக பிரிவுகளில் இயங்கும் தனது நிறுவனத்தின் பல்வேறு முதலீடுகளை மேற்பார்வையிடத் தொடங்கினார்.[6] சலாம் சர்வதேச முதலீட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீனம், குவைத், சவுதி அரேபியா, ஓமான், பகுரைன், ஜோர்தான், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளன.

உறுப்பினர் மற்றும் சங்கங்கள்[தொகு]

சர்வதேச அளவில், அவர் உலக பொருளாதார மன்றம் [7] மற்றும் அரபு வணிக சபை ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். 2012 கத்தார் அரேபிய வர்த்தக ஆளுமைகளின் பட்டியலில் இசா அபு-இசா 43 வது[8] இடத்தில் உள்ளார்.

சலாம் சர்வதேச முதலீட்டு நிறுவனம் மற்றும் சலாம் பௌனியன் நிறுவனம்[9] ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக இருப்பதைத் தவிர,[10] கத்தாரின் வணிக சமூகத்திற்கு சேவை செய்வதிலும், கத்தார் வர்த்தகத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முன்னணி அரசு சாரா அமைப்பான கத்தாரிய வர்த்தகர்கள் சங்கத்தின்[11] பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இசா அபு-இசா கத்தாரின் அல் சகாப் குதிரையேற்ற அகாதமி அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், பாலஸ்தீன முதலீட்டு வங்கியின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார், லெபனானில் உள்ள செரீன் அசையாச் சொத்து நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், சமீபத்தில் துருக்கிய-கத்தாரிய வர்த்தக சபையின் இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர் சமீபத்தில் சலாம் சர்வதேச நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

கல்வி[தொகு]

அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் டியாகோவில் உள்ள ஐக்கிய மாநில சர்வதேச பல்கலைகழகத்திலிருந்து அபு இசா வணிக நிர்வாகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

ஊடகம்[தொகு]

2009 ஆம் ஆண்டில், இவரை அரபு ஊடகத் தொலைக்காட்சி தொகுப்பாளரும் தயாரிப்பாளருமான ரிக்கார்டோ கரம் பேட்டி கண்டார்.[13] 2011 தக்ரீம் அரபு சாதனை விருது நிகழ்ச்சிகளில் விருந்தினர் பேச்சாளராகவும் இருந்தார்.[14][15]

சலாம் சர்வதேச முதலீட்டு நிறுவனம் (SIIL)[தொகு]

அபு இசாவின் தலைமையின் கீழ், சலாம் சர்வதேச முதலீட்டு நிறுவனம் அதிக வளர்ச்சியை கண்டது. 2006 ஆம் ஆண்டில், மூலதனம் மற்றும் விரிவாக்கத்தின் காரணமாக, நிறுவனம் லுசைலில் புதிய அலுவலக கட்டிடங்கள் மற்றும் கோபுரங்களை உருவாக்க திட்டமிட்டது.

2009 ஆம் ஆண்டில், தி பேர்ல்-கத்தார் ஜுமனா கோபுரக் கட்டிடத்தில் ஒரு பங்கை எடுக்க நிறுவனம் திட்டமிட்டது.[16]

நிறுவனம் சமீபத்தில் லெபனானில் 30 மில்லியன் டாலர் மூலதனத்துடன் மற்ற பங்குதாரர்களுடன் ஒரு புதிய முதலீட்டு வங்கியை நிறுவ திட்டமிட்டது..[17][18]

குறிப்புகள்[தொகு]

 1. "Issa Abdul Salam Abu Issa: Global Business Leaders". Global Business Leaders.
 2. "Salam International turns 60". http://thepeninsulaqatar.com/business-news/184773-salam-international-turns-60.html. 
 3. "Salam International: An Arabian thoroughbred" 2. AMEInfo.com (13 December 2004).
 4. "Securing family business through IPO". http://www.moneyworks.ae/news_article.php?news_id=137. 
 5. "Salam International Turns 60". Gulf Times (Qatar). 26 February 2012. http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=496331&version=1&template_id=48&parent_id=28. 
 6. "Salam International – Business Activities".
 7. "World Economic Forum: Partner Institutes".
 8. "Arabian Business Qatar Power List 2012". Arabian Business (2012).
 9. "Salam Bounian (Company Website)".
 10. "QBA Board of Directors – ISSA ABDUL SALAM ABU ISSA".
 11. "Qatari Businessmen Association Homepage".
 12. "Salam International Investment Ltd QSC : Press Statement SIIL Ordinary And Extra-Ordinary General Assembly Meeting Resolutions". 4 Traders (19 February 2012).
 13. "Issa Abdul Salam Abu-Issa Interview with Ricardo Karam" (2009).
 14. "TAKREEM Award for Outstanding Corporate Leadership".
 15. "TAKREEM Arab Achievement Awards – Our Profile".
 16. "SIIL eyeing expansion". The Gulf Times (Qatar). 4 March 2009. http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=276612&version=1&template_id=48&parent_id=28. 
 17. "Lebanese, Gulf investors to launch private bank with $13 mln capital" (29 August 2011).
 18. "Salam to Invest in New Investment Bank in Lebanon, Chief Says". Bloomberg (28 August 2011).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசா_அபு_இசா&oldid=2868355" இருந்து மீள்விக்கப்பட்டது