இசான் கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட்
இசான் கோசு
பிறப்பு2000
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைத்துறையில்2002–தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்ஏஆர்ஏஜெ [1]
இணையதளம்ishaanghosh.com

இஷான் கோசு (Ishaan Ghosh) கைம்முரசு இணை மற்றும் சித்தார் மேதையான பண்டிட் நயன் கோசின் மகனும் சீடரும் ஆவார். [2] [3] [4] இவர் பாரூகாபாத் கரானாவைச் (பாடும் பாணி) சேர்ந்த கைம்முரசு இணைக் கலைஞராவார். [5]

நிகழ்த்துக் கலை[தொகு]

இசான் தனது முதல் நிகழ்ச்சியை 2.5 வயதாக இருந்தபோதே வழங்கினார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் கைம்முரசு இணை மேதையான பத்ம பூசண் பண்டிட் நிகில் கோசுக்கும், 'வட இந்திய புல்லாங்குழலின் தந்தை' என்று பிரபலமாகக் கருதப்படும் பன்னாலால் கோசுக்கும் பேரனாவார். [6] பண்டிட் துருப கோசு இவரது மாமா ஆவார். [7]

8 வயதிலிருந்தே, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும் இசான் தொடர்ந்து பல நாடுகளில் பயணம் செய்து வருகிறார். 2016 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள வாழ்விடத்திற்கான மனிதநேய திட்டத்திற்காக இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். மேலும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் அவர்களால் பாராட்டப்பட்டார். [8]

இசான் தனது தந்தை நயன் கோசு, பண்டிட் ஜஸ்ராஜ், உஸ்தாத் அம்ஜத் அலி கான், புத்ததேவ் தாசு குப்தா, உஸ்தாத் ஆசிசு கான், உஸ்தாத் நிசாத் கான், பண்டிட் தேசேந்திர நாராயண் மசூம்தார், வயலின் மேதை என். இராஜம் கௌசிகி சக்ரவர்த்தி, ராகேசு சவுராசியா மற்றும் புர்பயன் சாட்டர்ஜி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் . [9] [10]

டெட் உள்ளிட்ட பல்வேறு இளைஞர் தளங்களில் பேச்சாளராகவும் உள்ளார். [11] [12]

ஏஆர்ஏஜெ[தொகு]

ஏஆர்ஏஜெ என்பது ஒரு இந்திய பாரம்பரிய இசை ஒத்துழைப்பு ஆகும், இது இசானால் வடிவமைக்கப்பட்டது. மேலும், விதிவிலக்காக திறமையான இளம் இந்திய இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்களின் குழுவுமாகும். [13]

நயன் கோசு - இசை வழிகாட்டி மற்றும் சித்தார் கலைஞர்

இசான் கோசு - கைம்முரசு இணை

எஸ்.ஆகாஷ் - புல்லாங்குழல்

மெக்தாப் அலி நியாசி - சித்தார்

வான்ராஜ் சாத்திரி - சாரங்கி

பிரதிக் சிங் - குரல் & கைம்முரசு இணை

விருதுகள்[தொகு]

இவருக்கு 'பாபா அலாவுதீன் கான் யுவ புரஸ்கார்' விருது வழங்கப்பட்டது. 2012 ல் மத்தியப் பிரதேசத்தில், 2016 இல் அமெரிக்க முன்னால் அதிபர் ஜிம்மி கார்ட்டர் வழங்கிய 'சாதனை விருதும்', 2019 இல் 'ரைசிங் ஸ்டார் விருதும்' வழங்கப்பட்டது. [14]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-12-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  2. https://www.thehindu.com/entertainment/music/strong-and-sure/article31109888.ece
  3. https://medium.com/the-gleaming-sword/ishaan-ghosh-on-the-tradition-and-future-of-tabla-6219a4f86713
  4. http://www.radioandmusic.com/entertainment/editorial/news/180330-being-part-rich-lineage-has-given-me-sense
  5. https://www.thehindu.com/entertainment/music/strong-and-sure/article31109888.ece
  6. http://ishaanghosh.com/aboutus.php
  7. https://www.eatmy.news/2020/12/ishaan-ghosh-in-music-taleem-or.html
  8. http://ishaanghosh.com/aboutus.php
  9. http://ishaanghosh.com/aboutus.php
  10. https://www.eatmy.news/2020/12/ishaan-ghosh-in-music-taleem-or.html
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-12-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  12. http://ishaanghosh.com/aboutus.php
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-12-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  14. https://www.eatmy.news/2020/12/ishaan-ghosh-in-music-taleem-or.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசான்_கோசு&oldid=3764742" இலிருந்து மீள்விக்கப்பட்டது