இசானி கௌசல்யா
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | லோகுசூரியகே ஈசானி கௌசல்யா | |||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 1 சூன் 1984 பனதுரா, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலது கை நடுத்தரம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 31) | 22 மாா்ச்சு 2005 எ. [[இந்தியா பெண்கள் துடுப்பாட்ட அணி|இந்தியா]] | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | 15 சூலை 2017 எ. [[பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]] | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 6) | 12 சூன் 2009 எ. [[பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]] | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி இ20ப | 16 நவம்பா் 2018 எ. [[மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 19 செப்டம்பா் 2021 | ||||||||||||||||||||||||||||||||||||||||
இசானி கௌசல்யா (Eshani Kaushalya) (இசானி லோகுசூரியகே என்றும் அழைக்கப்படுகிறார், பிறப்பு 1 சூன் 1984) என்பவர் இலங்கை தேசிய மகளிர் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய ஒரு முன்னாள் இலங்கை துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். ஒரு சகலகலா வித்தகா் இவர், வலது கை மட்டையாளராகவும் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளராகவும் விளையாடினார்.[1]
கௌசல்யா 2005 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது இந்தியாவிற்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார், அதில் ஏழு ரன்கள் எடுத்தார்.[2] பின்னர் அதே தொடரில், மேற்கிந்திய வீராங்கனை ஜூலியானா நீரோவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்து தனது முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார்.[3] 2006 மகளிர் ஆசியக் கோப்பையின் போது இலங்கைக்காக சிறப்பாக மட்டையாடிய இவர், தனது நாட்டிற்காக மட்டையாட்ட சராசரியில் முதலிடம் பிடித்தார். 35.33 சராசரியில் 106 ஓட்டங்கள் எடுத்தார். இதில் இவரது அதிகபட்ச ஓட்டங்களான 57 ஓட்டங்களும் அடங்கும்.[4] 2013 மகளிர் துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தின் போது, இவர் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிராக இரண்டு அரை சதங்களை அடித்தார்,[2] மேலும் சர்வதேச துடுப்பாட்ட சபையினால் தொடரின் சிறந்த அணியில் இடம் பெற்றார்.[5]
பெப்ரவரி 2016இல், இவர் ஆமா கஞ்சனாவுடன் இணைந்து இருபது20 வரலாற்றில் அதிகபட்ச 8வது விக்கெட் கூட்டுப்பங்களிப்பை (39) பதிவு செய்தார்.[6][7]
அக்டோபர் 2018இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபது20 தொடருக்கான இலங்கை அணியில் இவர் இடம் பெற்றார்.[8]
அக்டோபர் 2021இல், இவர் துடுப்பாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player Profile: Eshani Kaushalya". ESPNcricinfo. Retrieved 13 April 2013.
- 1 2 "Statistics / Statsguru / LE Kaushalya / Women's One-Day Internationals". ESPNcricinfo. Retrieved 13 April 2013.
- ↑ "16th Match: Sri Lanka Women v West Indies Women at Benoni, Mar 28, 2005". ESPNcricinfo. Retrieved 13 April 2013.
- ↑ "Records / Women's Asia Cup, 2006/07 - Sri Lanka Women / Batting and bowling averages". ESPNcricinfo. Retrieved 13 April 2013.
- ↑ "ICC names ICC Women's World Cup India 2013 Team of the Tournament". International Cricket Council. 18 பெப்ரவரி 2013. Archived from the original on 23 பெப்ரவரி 2013. Retrieved 13 ஏப்ரல் 2013.
- ↑ "Records | Women's Twenty20 Internationals | Partnership records | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283612.html.
- ↑ "3rd T20I: India Women v Sri Lanka Women at Ranchi, Feb 26, 2016 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/967873.html.
- ↑ "Squads confirmed for ICC Women's World T20 2018". International Cricket Council. Retrieved 10 October 2018.
- ↑ "Sri Lanka allrounder Eshani Lokusuriyage retires at 37". ESPN Cricinfo. Retrieved 28 October 2021.