இசபெல் ஆரென்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசபெல் ஆரென்ட்சு (Isabel Arends) (பிறப்பு:1966) [1] ஒரு டச்சு வேதியியலாளரும், உயிரியக்கவியல் மற்றும் கரிம வேதியியல் பேராசிரியரும் ஆவார். இவர் நெதர்லாந்தில் உள்ள யுட்ரெக்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். 2018 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் அதன் அறிவியல் புலத்தின் துறைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] இவரது ஆராய்ச்சி சுற்றுச்சூழலுக்குகந்த, பசுமை வேதியியல் தொடர்பானதாகும். எடுத்துக்காட்டாக, நச்சு கரைப்பான்களின் தேவையைத் தவிர்த்து உயிரியக்கவியல் காரணிகளான நொதிகளைப் பயன்படுத்துதல் போன்றவை இவரது ஆய்வில் உள்ளடங்குகின்றன.[3]

கல்வி வாழ்க்கை[தொகு]

ஆரென்ட்சு 1984 மற்றும் 1988 க்கு இடையில் லைடன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கரிம வேதியியலைப் படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். 1993 ஆம் ஆண்டில் இவர் அதே பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்: 'நிலக்கரி வகை ஹைட்ரஜன் வழிப்பொருள்களுடன் அரீன் வழிப்பொருள்களின் வெப்பப் பகுப்பாய்வு' என்ற தலைப்பில் ராப் லூவ் மற்றும் முனைவர் பீட்டர் முல்டர் ஆகியோரின் வழிகாட்டுதலில் தனது ஆய்வை முடித்தார்.[4] ஆராய்ச்சி பட்டப்படிப்பைத் தொடர்ந்து, கனடாவின் ஒட்டாவாவில் இசுடீசி மூலக்கூறு அறிவியலட நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குப் பிந்தைய ஆராய்ச்சியாளராக ஆரென்ட்சு ஒரு ஆண்டினைக் கழித்தார். 1995 ஆம் ஆண்டில் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மேலும், உயிரிபோலச் செயல்களில் ஈடுபட்டு ஆக்சிஜனேற்றம் நிகழ்த்தும் துறையில் இராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாதெமியின் ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெற்றார்.[5]

2001 மற்றும் 2006 க்கு இடையில் அவர் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இணை மற்றும் உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டில் அவர் உயிர் வேதியியல் மற்றும் கரிம வேதியியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.[6] 2013 முதல் 2018 வரை டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரியத் தொழில்நுட்பத் துறையின் தலைவராகவும் [4] அறிவியல் ஆராய்ச்சிக்கான நெதர்லாந்து அமைப்பின் பயன்பாட்டு மற்றும் பொறியியல் அறிவியல் களத்தின் துணைத் தலைவராகவும், 2016 ஆம் ஆண்டில் டியு டெல்ஃப்ட் உயிரியப்பொறியியல் நிறுவனத்தை நிறுவினார்.[7]

ஆரென்ட்சு 2017 ஆம் ஆண்டில் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Isabel Arends nieuw bestuurslid STW" (in Dutch). Technologiestichting STW [nl]. 19 December 2013. Archived from the original on 10 December 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Isabel Arends new dean of the Faculty of Science". Utrecht University (in ஆங்கிலம்). 2018-04-03. Archived from the original on 2019-02-10.
  3. "Isabel Arends". Royal Netherlands Academy of Arts and Sciences. Archived from the original on 10 February 2019.
  4. 4.0 4.1 "Isabel Arends Group". TU Delft (in ஆங்கிலம்). Archived from the original on 2019-02-10. பார்க்கப்பட்ட நாள் 2019-02-09.
  5. "One-Flow". one-flow.org. Archived from the original on 2019-02-10. பார்க்கப்பட்ட நாள் 2019-02-09.
  6. "Isabel Arends Group". Delft University of Technology. Archived from the original on 10 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Isabel Arends new dean of the Faculty of Science". Utrecht University (in ஆங்கிலம்). 2018-04-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-09.
  8. "Royal Academy selects 26 new members". Royal Netherlands Academy of Arts and Sciences. 10 May 2017. Archived from the original on 5 June 2017.
  9. "New KNAW members include three chemists". www.nwo.nl. பார்க்கப்பட்ட நாள் 2019-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசபெல்_ஆரென்ட்சு&oldid=3927569" இலிருந்து மீள்விக்கப்பட்டது