உள்ளடக்கத்துக்குச் செல்

இசட் தலைமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசட் தலைமுறை (Generation Z), மனித தலைமுறைகளை பிரித்து வகுப்பதில் இது ஒரு முறையாகும்.1995ஆம் ஆண்டிற்கும் 2009ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களை "இசட்" தலைமுறையினர் என வகைப்படுத்தியுள்ளனர்.[1]இத்தலைமுறைக்கு முன்னர் பிறந்தவர்களை ஒய் தலைமுறையினர் என்றும், இத்தலைமுறைக்கு பின் பிறந்தவர்களை ஆல்பா தலைமுறையினர் என்றும் அழைப்பர்.

இசட் தலைமுறையினரின் பண்புகள்

[தொகு]

இத்தலைமுறையினரில் பெரும்பான்மையோர் மடிக்கணினி, கணினி, டேப்லெட், திறன்பேசி போன்றவைகளை அதிகமாக கையாள்வார்கள். சமூக ஊடகங்களில் நாட்டமுள்ளவர்கள். இணையம் வழியே சமூகச் சிந்தனையையும், இயற்கை குறித்த அறிவையும் வளர்த்து வைத்திருப்பார்கள். விழிப்புணர்வோடு செயல்படுபவர்கள். இத்தலைமுறையினரில் பலர் வாக்கு செலுத்தும் வயதை எட்டிப் பிடிக்காவிட்டாலும் அரசியல் பற்றிய தெளிவோடு இருப்பார்கள்.[2][3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசட்_தலைமுறை&oldid=4187232" இலிருந்து மீள்விக்கப்பட்டது