இசடோரா டங்கன்
இசடோரா டங்கன் | |
---|---|
பிறப்பு | ஏஞ்சலா இசடோரா டங்கன் மே 26, 1877 [a] சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, அமெரிக்கா. |
இறப்பு | நீஸ், பிரான்ஸ் | செப்டம்பர் 14, 1927 (அகவை 50)
தேசியம் | அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் |
அறியப்படுவது | நடனம் , நடன வ்டிவமைப்பு |
அரசியல் இயக்கம் | நவீன நடனம் |
ஏஞ்சலா இசடோரா டங்கன் ( Angela Isadora Duncan; மே 26, 1877 அல்லது மே 27, 1878 [a] - செப்டம்பர் 14, 1927) ஒரு அமெரிக்க நடனக் கலைஞரும், நடன அமைப்பாளரும் ஆவார். இவர் நவீன சமகால நடனத்தின் முன்னோடியாக இருந்தார். மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றார். கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்த இவர், மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் நீஸ், சோவியத் ஒன்றியம் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 22 வயதில் இருந்து 50 வயதில் இறக்கும் வரையில் நடனமாடினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இசடோரா டங்கன் சான் பிரான்சிஸ்கோவில் வங்கியாளரும் சுரங்கப் பொறியாளருமான ஜோசப் சார்லஸ் டங்கன் (1819-1898), மற்றும் மேரி இசடோரா கிரே (1849-1922) ஆகியோரின் நான்கு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தார். இவரது அகஸ்டின் டங்கன் மற்றும் ரேமண்ட் டங்கன் [1] என்ற இரு சகோதரர்களும் நடனக் கலைஞரான எலிசபெத் டங்கன் என்ற ஒரு சகோதரியும் இருந்தனர்.[2][3] இசடோரா பிறந்த உடனேயே, இவரது தந்தை தான் நிறுவிய வங்கிகளில் நிதிமுறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. அவர் சிறை செல்வது தவிர்க்கப்பட்டாளும், இசடோராவின் தாய் தனது கணவரின் துரோகங்கள் மற்றும் நிதி ஊழலால் கோபமடைந்து அவரை விவாகரத்து செய்தார், அன்றிலிருந்து, குடும்பம் வறுமையுடன் போராடியது.[1]
1896 ஆம் ஆண்டில், டங்கன் நியூயார்க்கில் உள்ள அகஸ்டின் டேலியின் நாடக நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஆனார். ஆனால் விரைவில் நிறுவனத்தின் வடிவத்தின் மீது ஏமாற்றமடைந்தார். மேலும், ஒரு படிநிலை இல்லாத வேறுபட்ட சூழலை விரும்பினார்.[4]
பணிகள்
[தொகு]டங்கனின் நடனம் குறித்த அணுகுமுறை இவர் ஒரு இளைஞியாக கற்பித்த வகுப்புகளில் இருந்தே தெளிவாகத் தெரிந்தது."தனது கற்பனையைப் பின்பற்றி மேம்படுத்தி, எந்தவொரு அழகான விஷயத்தையும் கற்பித்தார்".[5] பயண ஆசை இவரை சிகாகோவிற்கு கொண்டு வந்தது. அங்கு பல நாடக நிறுவனங்களில் சேர முயற்சி செய்து, இறுதியாக அகஸ்டின் டேலியின் நிறுவனத்தில் சேர்ந்தார். இது இவரை நியூயார்க் நகரத்திற்கு அழைத்துச் சென்றது.[6] அங்கு நடனம் பற்றிய இவரது தனித்துவமான பார்வை நாடக நிறுவனங்களின் பிரபலமான பொழுதுபோக்குகளுடன் மோதியது. [7] நியூயார்க்கில் இருந்தபோது, டங்கன் மேரி போன்ஃபான்டியுடன் சில வகுப்புகளை எடுத்தார். ஆனால் பாலே நடனத்தில் விரைவில் ஏமாற்றமடைந்தார்.
இறப்பு
[தொகு]செப்டம்பர் 14, 1927 இரவு, நீஸ்ஸில் ஒரு வாகனத்தில் பயணிக்கும்போது இவரது தாவணி சக்கரத்தில் சிக்கி இறந்தார்.[8][9][10][11]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 While Duncan's birth date is widely given as May 27, 1878, her posthumously discovered baptismal certificate records May 26, 1877. Any corroborating documents that might have existed were likely destroyed in the 1906 San Francisco earthquake. See "Isadora Duncan". Encyclopædia Britannica.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Deborah Jowitt (1989). Time and the Dancing Image. University of California Press. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-06627-4.
- ↑ Genthe, Arnold (photographer). "Elizabeth Duncan dancer". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2017-10-07.
- ↑ Lilian Karina; Marion Kant (January 2004). Hitler's Dancers: German Modern Dance and the Third Reich. Berghahn Books. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57181-688-7.
- ↑ International encyclopedia of dance : a project of Dance Perspectives Foundation, Inc. Cohen, Selma Jeanne, 1920–2005., Dance Perspectives Foundation. (1st paperback ed.). New York: Oxford University Press. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517369-7. இணையக் கணினி நூலக மைய எண் 57374499.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ Duncan (1927), p. 21
- ↑ Duncan (1927), p. 31
- ↑ Duncan (1927), p. 31
- ↑ Sturges (1990), pp. 227–230
- ↑ "DEATH By Flowing Scarf – Isadora Duncan, USA". True Stories of Strange Deaths. Archived from the original on 6 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
- ↑ "Isadora Duncan Meets Fate". Los Angeles Times. Associated Press. http://www.latimes.com/local/obituaries/archives/la-me-isadora-duncan-19270915-story.html.
- ↑ "Isadora Duncan killed in Paris under wheels of car she was buying". Sandusky Star Journal. September 15, 1927. http://clickamericana.com/eras/1920s/dancer-isadora-duncan-killed-in-bizarre-accident-1927.