உள்ளடக்கத்துக்குச் செல்

இசக்கி கார்வண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசக்கி கார்வண்ணன் (Esakki Karvannan) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களை இயக்கியுள்ளார். இவர் காதல் திரைப்டமான பகரி (2016) மூலம் புகழ் பெற்றார். மேலும் பெட்டிக்கடை (2019) தமிழ்க்குடிமகன் (2023) உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

திரைத்துறையில்

[தொகு]

இசக்கி கார்வண்ணன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் பகிரி (2016). இது தமிழ்நாட்டில் விவசாயிகளின் அவல நிலையைப் பற்றிப் பேசிய படம். படத்தின் தலைப்பு வாட்சப்பிற்கான ஒலிபெயர்ப்பு மொழிபெயர்ப்பாகும். இது கதைக்களத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக அமைந்தது.[1] இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்தத் திரைப்படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு இரண்டு மதிப்பீட்டை வழங்கியது. மேலும் "விவசாயிகள் தண்ணீருக்காகப் போராடும் நேரத்தில், இந்தப் படம் ஒரு தவறவிட்ட வாய்ப்பாக உணர்கிறது" என்று கூறியது.[2] டெக்கான் குரோனிக்கிள் இதே மதிப்பீட்டை வழங்கியது. "இறுதியில், 'சாமானிய மக்களின் துயரங்கள்' என்ற கருத்துக்கு பகிரி ஒரு புதிய திருப்பம் என்றும் நகைச்சுவையில் இத்திரைப்படம் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று எழுதியது.[3] சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த இவரது இரண்டாவது படமான பெட்டிக்கடை (2019), குழந்தைகளின் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல செயல்களைக் கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் செய்தியைக் கொண்டிருந்தது.[4] தி நியூ இந்தியன் எக்சுபிரசின் விமர்சகர் இது "பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நிறைந்த சிறிய படம்" என்று குறிப்பிட்டார்.[5]

இவரது அடுத்த வெளியீடான தமிழ்க்குடிமகன் (2023) திரைப்படத்தில் சேரன் முக்கிய வேடத்தில் நடித்தார். படம் வெளியாவதற்கு முன்பு, கார்வண்ணன் இந்த படம் தமிழ் கலாச்சாரம் குறித்த விவாதங்களை உருவாக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.[6]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்பு
2016 பகரி
2019 பெட்டிக்கடை
2023 தமிழ்க்குடிமகன்
2025 பரமசிவன் பாத்திமா dagger [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pagiri deals with farmer's plight". 27 June 2016.
  2. "Pagiri Movie Review {2/5}". 22 September 2016. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/pagiri/movie-review/54388901.cms. 
  3. "Review: You'll definitely not get high watching Pagiri". 17 September 2016.
  4. "'Pettikadai is familiar territory for Samuthirakani'". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2023-09-23.
  5. "Pettikadai movie review: A petty film filled with regressive ideas". The New Indian Express. 22 February 2019. Retrieved 2023-09-23.
  6. "'தமிழ்க்குடிமகன் விவாதங்களை எழுப்பும்' - இயக்குநர் இசக்கி கார்வண்ணன்". Hindu Tamil Thisai. 2022-09-11. Retrieved 2023-09-23.
  7. Kumar, Akshay (2025-05-13). "Vemal's Paramsivan Fathima gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-22.

வெளியிணைப்புகள்

[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இசக்கி கார்வண்ணன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசக்கி_கார்வண்ணன்&oldid=4285797" இலிருந்து மீள்விக்கப்பட்டது