இங்சுகேப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்சுகேப்பு
Inkscape
தொடக்க வெளியீடுநவம்பர் 2, 2003; 20 ஆண்டுகள் முன்னர் (2003-11-02)
அண்மை வெளியீடு1.3.2[1] Edit this on Wikidata / 25 நவம்பர் 2023
மொழிசி++ with சிடிகேம்ம், பைத்தான் (நீட்சிகள்)
இயக்கு முறைமைலினக்சு
மாக்
விண்டோசு
தளம்IA-32 and x64
கோப்பளவு81.6 MB
மென்பொருள் வகைமைதிசையன் வரைகலை
உரிமம்GPL-3.0-or-later[2]
இணையத்தளம்inkscape.org

இங்சுகேப்பு (Inkscape) என்பது ஒரு இலவச மற்றும் திற மூல மென்பொருள் ஆகும், இது திசையன் படங்களை உருவாக்க பயன்படுகிறது, இது விரித்திசையன் வரைகலை அதாவது (Scalable vector graphics) கோப்பினை முதன்மையாக பயன்படுத்துகிறது. பிற கோப்பு வகைகளை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் இந்த மின் பொருள் செய்ய முடியும்.[3] இந்த மென்பொருள் லினக்சு , விண்டோசு மற்றும் மாக் இயங்குதலங்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இங்சுகேப்பினால் பல திசையன் வடிவங்களை வரைய முடியும். (எ.கா. செவ்வகங்கள், நீள்வட்டங்கள், பலகோணங்கள், வளைவுகள், சுருள்கள், நட்சத்திரங்கள் மற்றும் 3D பெட்டிகள்) மற்றும் மென்பொருளில் உள்ள எழுத்து கருவி மூலம் எழுதலாம். இதுபோன்று இன்ஸ்கேபில் பல கருவிகள் உள்ளன.

வரலாறு[தொகு]

2003இல் சோடிபோடி மின் பொருளின் அடிப்படையிலே இன்ஸ்கிப் உருவாக்கப்பட்டது. சோடிபொடி மின்பொருள் என்பது ஒரு திற மூல மென்பொருளாகும், 1999 இல் உருவாக்கப்பட்டது இது ராஃப் லெவியன் கில் (குநோம் வரைகலை மின்பொருள்).[4] குநோம் பயனர் இடைமுகம் (GNOME human interface) வடிவத்தை பயன்படுத்துதல் இன்ஸ்கிப் திட்டத்தின் முதன்மை குறிக்கோள்.

மேற்கோள்[தொகு]

  1. "Inkscape 1.3.2".
  2. "COPYING in Inkscape source". பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
  3. "Inkscape Features". Inkscape.org. பார்க்கப்பட்ட நாள் 13 January 2020.
  4. "History of Inkscape, Vector Image Editor Software" (in ஆங்கிலம்). 2019-04-23. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Screencasts of Inkscape
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்சுகேப்பு&oldid=3838558" இலிருந்து மீள்விக்கப்பட்டது