உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கியோங்

ஆள்கூறுகள்: 28°36′37″N 95°02′51″E / 28.61037°N 95.047531°E / 28.61037; 95.047531
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கியோங்
இங்கியோங் நகரத்தின் வரவேற்பு வளைவு
இங்கியோங் நகரத்தின் வரவேற்பு வளைவு
இங்கியோங் is located in அருணாசலப் பிரதேசம்
இங்கியோங்
இங்கியோங்
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இங்கியோங் நகரத்தின் அமைவிடம்
இங்கியோங் is located in இந்தியா
இங்கியோங்
இங்கியோங்
இங்கியோங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°36′37″N 95°02′51″E / 28.61037°N 95.047531°E / 28.61037; 95.047531
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்மேல் சியாங் மாவட்டம்
நிறுவிய ஆண்டு1999
ஏற்றம்
200 m (700 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,573
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
791002
வாகனப் பதிவுAR-14
இணையதளம்https://uppersiang.nic.in/

இங்கியோங் (Yingkiong), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மேல் சியாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும்.[1]இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடக்கே 250 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.[2]இந்நகரத்திற்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது.[3]

புவியியல்

[தொகு]
இங்கியோங் நகரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 513

கிழக்கு இமயமலைத் தொடரின் பள்ளத்தாக்கில் அமைந்த இங்கியோங் நகரத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது.[4]இது கடல்மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,595 குடும்பங்கள் கொண்ட இங்கியோங் பேரூராட்சியின் மக்கள் தொகை 6,540 ஆகும். அதில் 3,364 ஆண்கள் மற்றும் 3,176 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.53% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.17% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 60.70% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 31.01%, இசுலாமியர் 3.03% பௌத்தர்கள் 1.79%, கிறித்தவர்கள் 16.22% மற்றும் பிற சமயத்தினர் 47.16%% வீதம் உள்ளனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Upper Siang | Arunachal Pradesh | DISTRICTS OF INDIA". districts.nic.in (in ஆங்கிலம்). Retrieved 2018-09-19.
  2. "Brief Industrial Profile of Upper Siang District" (PDF). Archived from the original (PDF) on 8 April 2015. Retrieved 21 September 2018.
  3. "Unnamed Road to Unnamed Road". Unnamed Road to Unnamed Road (in ஆங்கிலம்). Retrieved 2019-06-14.
  4. "Ground Water Information Booklet. Upper Siang District, Arunachal Pradesh" (PDF). September 2013.
  5. Yingkiong Town Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கியோங்&oldid=4247347" இலிருந்து மீள்விக்கப்பட்டது