இக்யாங்கி மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக்யாங்கி மாநிலம்
경기도
மாநிலம்
Korean transcription(s)
 • Hangul
 • Hanja
 • Revised RomanizationGyeonggi-do
 • McCune‑ReischauerKyŏnggi-do
Location of இக்யாங்கி மாநிலம்
நாடுதென் கொரியா
மண்டலம்சியோல் தேசியத் தலைநகர்ப் பகுதி (சுடொக்வொன்)
தலையகர்சுவொன்
உட்பிரிவுகள்28 ஊர்கள்; 3 கவுன்ட்டிகள்
அரசு
 • ஆளுநர்நாம் குயோங் பில்
பரப்பளவு
 • மொத்தம்10,171 km2 (3,927 sq mi)
பரப்பளவு தரவரிசை5ஆவது
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்12,093,000
 • தரவரிசை1ஆவது
 • அடர்த்தி1,170.6/km2 (3,032/sq mi)
Metropolitan Symbols
 • FlowerForsythia
 • TreeGinkgo
 • Birdபுறா
வட்டாரமொழிசியோல்
இணையதளம்gg.go.kr (ஆங்கிலம்)

இக்யாங்கி-தொ (Gyeonggi-do, அங்குல்: 경기도) தென் கொரியாவில் மிகுந்த மக்கள்தொகை உடைய மாநிலமாகும்.இதன் பெயரான இக்யாங்கியின் பொருள் "தலைநகரை அடுத்தப் பகுதி" என்பதாகும். எனவே இக்யாங்கி-தொ என்றால் "சியோலை அடுத்துள்ள மாநிலம்" எனப் பொருள் கொள்ளலாம். இம்மாநிலத்தின் தலைநகராக சுவொன் உள்ளது. தென் கொரியாவின் மிகப் பெரியதும் தலைநகரமுமான சியோல் இம்மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது; ஆனால் 1946ஆம் ஆண்டு சட்டப்படி சியோலிற்கு மாநிலத்திற்கு இணையான அதிகாரங்களுடன் சிறப்பு நகரம் என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல தென் கொரியாவின் மூன்றாவது பெரிய நகரமான இஞ்சியோன் இம்மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள போதிலும் 1981இலிருந்து மாநிலத்திற்கு இணையான அதிகாரங்களுடன் பெருநகரப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிர்வாகப் பிரிவுகளும் இணைந்து11,730 கிமீ2 பரப்பளவில் 25.6 மில்லியன் மக்கள்தொகையுடன் விளங்குகின்றன; இது தென் கொரியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்யாங்கி_மாநிலம்&oldid=1717734" இருந்து மீள்விக்கப்பட்டது