இக்பால் அகமது அன்சாரி
இக்பால் அகமது அன்சாரி Iqbal Ahmed Ansari | |
|---|---|
| தலைவர், பஞ்சாப் மனித உரிமை ஆணையம் | |
| பதவியில் 1 ஆகத்து 2017 – 1 ஆகத்து 2022 | |
| முன்னையவர் | சகதீசு பாலா |
| பின்னவர் | சண்ட்டு பிரகாசு |
| 39ஆவது தலைமை நீதிபதி, பாட்னா உயர்நீதி மன்றம் | |
| பதவியில் 29 சூலை 2016 – 28 அக்டோபர் 2016 | |
| முன்னையவர் | எல். நரசிம்ம ரெட்டி |
| பின்னவர் | இராசேந்திர மேனன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 அக்டோபர் 1954 தேச்பூர், அசாம் |
இக்பால் அகமது அன்சாரி (Iqbal Ahmed Ansari) என்பவர் இந்தியாவின் ஓர் ஓய்வுபெற்ற நீதிபதியும், பாட்னா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1][2] 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
தொழில்
[தொகு]தேச்பூரில் உள்ள தாரங் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பையும், தேச்பூர் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பையும் முடித்தார். 2004-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4-ஆம் தேதி இவர் குவகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும் பணியாற்றிய இவர், அதற்கேற்ப சட்ட விழிப்புணர்வுப் பணிகளையும் மேற்கொண்டார்.
2016ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இவர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். [3] பின்னர் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஓய்வு பெற்றார்.
2017ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று, பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Former Chief Justices of Patna High Court patnahighcourt.gov.in. Retrieved 20 March 2020.
- ↑ Chairperson pshrc.net. Retrieved 20 March 2020.
- ↑ Justice Iqbal Ahmed Ansari sworn in as Chief Justice of Patna High Court NDTV
- ↑ Retired Judge - New PSHRC Chairperson Daily Pioneer