இக்னேஷியஸ் லயோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்னேஷியஸ் லயோலா இக்னேஷியஸ் லயோலா 1491 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் லயோலா என்னும் நகரில் பிரபு குடும்பத்தில் பிறந்தவர்.

அர்ப்பணிப்பு[தொகு]

இக்னேசியஸ் இளம் வயதில் தான் ஓர் போர் வீரனாக வேண்டும் என்று விரும்பி ராணுவத்தில் சேர்ந்தார். பிரான்ஸ் ,ஸ்பெயின் மீது படையெடுத்தது.அப்போரில் கலந்துகொண்ட அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.அதற்கு சகிச்சை பெற்றுகொண்டிருக்கும்போது படிப்பதற்கு ஏதேனும் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டபோது அவரிடம் எசுநாதருடைய வரலாற்று புத்தகம் தரப்பட்டது.அப்புத்தகத்தைப் படிக்க படிக்க அதில் ஈடுபாடு கொண்டார்.அவருடைய வழக்கை போக்கையே அது மாற்றியமைத்தது.ஆண்டவன் சேவைக்கு தம்மை அற்பணித்துக்கொள்ள முடிவுசெய்தார். அப்போது அவர் வயது முப்பது.

ஏசு சபை உருவாக்கம்[தொகு]

உடல் தேறியும் கால் ஊனம் நிலைத்துவிட்டது.முதல் வேலையாக தேவாலயத்துக்கு சென்று பாவ மன்னிப்பு கோரினார்.தேவமாதாவின் பீடத்தில் போர்வாளை வைத்துவிட்டு எளிய உடை அணிந்து பிச்சை எடுத்து உண்டார்.பிரார்த்தனையிலும், ஏழைகளுக்கு தொண்டு செய்வதிலும், கடுமையான விரதங்கள் மேற்கொண்டும் தன் உடலை வருத்திக்கொண்டர். ஆண்டவனுக்கு சேவை செய்ய தம் அறிவை வளதுகொள்ள வேண்டும் என்று தோன்றவே ஸ்பெயினுக்கு சென்றார்.மூன்று பல்கலைகழகங்களில் படித்து விட்டு பாரிஸ் சென்று 1534 இல் தம்முடன் படித்த ஆறு பேருடன் சேர்ந்து ஏசு சபையை அமைத்தார். இச்சபை உறுப்பினர்கள் கடும் விதிமுறைகளைப் பின்பற்றினர். இவர்கள் ஜெஸ்யூட்டுகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் உருவாக்கிய ஏசு சபை ரோமன் கத்தோலிக்கர்களுடைய மிகப் பலம் வாய்ந்த அமைப்பாக பின்னர் அது மாறியது. இக்னேஷியஸ் 1556 இல் காலமானார். ஏசு சபையை உருவாக்கியதும் அதற்கான விதிமுறைகளை வகுத்ததும் அவருடைய கடும் பணியாகும். எதற்கும் அஞ்சாமல் பணியாற்றும் உணர்வை இச்சபையோருக்கு அவர் ஊட்டினார்.

அவர் எழுதிய நூல்கள்[தொகு]

அவர் அழுத்திய நூல்கள் உடலையும் உள்ளத்தையும் அடக்கி புனிதநிலை அடைய மனதைப் பக்குவப்படுத்தும் வழிகளைக் கூறுகின்றன. இச்சபை மக்களுக்கு கல்விப் பணியும் சமூகப்பணியும் செய்வதோடு , இளைஞர்களின் சமூக வளாச்சிக்கு துணைபுரிகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் மறை பரப்புப் பணியோடு சேர்ந்து மேல் கூரியவற்றையும் செய்து வருகிறது.

பார்வை நூல்[தொகு]

வரலாற்றில் வாழ்பவர்கள், சங்கரன் . எஸ், 1999 பூங்கொடி பதிப்பகம், சென்னை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்னேஷியஸ்_லயோலா&oldid=2723461" இருந்து மீள்விக்கப்பட்டது