இக்சுக்காரியானா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக்சுக்காரியானா
நாடு(கள்)பிரேசில்
பிராந்தியம்மேல் நமுண்டா ஆறு, அமேசோனாசு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
600  (2000)[1]
கரிபிய
  • பாருகோட்டோவான்
    • வைவை
      • இக்சுக்காரியானா
மொழிக் குறியீடுகள்
ISO 639-3இக்சு
மொழிக் குறிப்புhixk1239[2]
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

இக்சுக்காரியானா மொழி (Hixkaryana language) கரிபிய மொழிகளுள் ஒன்று. பிரேசிலில், அமேசான் ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான நமுண்டா ஆற்றுப் பகுதியில் வாழும் 600க்குச் சற்றுக் கூடுதலான மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி பேசுபவர்களில் பலர் வைவை மொழியையும், போர்த்துக்கேய மொழியையும் பேசக் கூடியவர்களாக உள்ளனர். எனினும் இவர்களுடைய சொந்த மொழிப் பயன்பாடு மிகவும் வலுவாகவே காணப்படுகிறது. இலத்தீன் எழுத்துக்களே இம்மொழியை எழுதப் பயன்படுகின்றன. இக்சுக்காரியானா மொழியை முதல்மொழியாகப் பேசும் மக்களிடையே எழுத்தறிவு 60% வரை உள்ளது. இது செ.ப.எ சொல் ஒழுங்கைக் கொண்ட ஒரு மொழியாகக் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hixkaryána | Ethnologue". பார்த்த நாள் 11 சூலை 2015.
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Hixkaryana". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/hixk1239. 
  3. - Hixkaryána - A language of Brazil, எத்னாலாக் இணையத்தளத்தில் இருந்து.