இகோர் பெல்கோவிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இகோர் விளாதிமிரோவிச் பெல்கோவிச் (Igor Vladimirovich Bel'kovich) (Игорь Владимирович Белькович) (அக்தோபர் 15, 1904 ([[ஜூலிய கால அட்டவணை: அக்தோபர் 2) – மே 30, 1949) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் நிலா உருவளவு ஆய்வில் வல்லுனர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் ஓர் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன் இளமைக் காலத்தை நதேழ்தினோவிலும் இலைழ்செவீவிலும் கழித்தார். இவர் 1922 இல் கழான் வணிக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் கழான் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கணிதவியல் புலத்தில் ஆசிரியராக சேர்ந்தார். இவர் 1927 இல் பல்கலைக்கழகப் பட்ட்த்தைப் பெற்றதும் அங்கே சிறப்பு வானியலாளர் ஆனார்.

இவர் 1928 இல் கழான் பல்கலைக்கழகத்தின் வி. பி. எங்கலார்த் வான்காணகத்தில் கணிப்பாளர் பதவியில் சேர்ந்தார்.

இவர் 1931 முதல் 1948 வரை நிலாவின் கதிரளவையியல் நோக்கீடுகளை மேற்கொண்டார். இவர் நிலா விளிம்பில் உள்ள புள்ளிகளில் அமைந்த மெசுட்டிங் ஏ குழிப்பள்ளத்தின் 247 தொடர் அளவீடுகளை எடுத்தார்.

இவரது மகனான ஒலேகு இகோரேவிச் பெல்கொவிச் கூட ஒரு வானியலாளர் ஆவார்.

நிலாவின் ஒரு ஒரு குழிப்பள்ளம் பெல்கோவிச் குழிப்பள்ளம் என பெயரிடப்பட்டுள்ளது.

பணிகள்[தொகு]

• I. Belkovich. On the issue of limb effect in observations of the Moon // News of the United Arab Emirates. - 1936. - № 10 .

• Belkovich IV. On the question of the values of the moments of inertia of the Moon // Astronomical Circular. - 1948. - № 81 .

• Belkovich I.V. Physical libration of the Moon // News of the United Arab Emirates. - 1949. - № 24 .

இலக்கியம்[தொகு]

Rizvanov NG, Nefed'ev Yu.A., Kutlenkov MV. Researches on selenodesy and the dynamics of the moon in Kazan // Georesources. - Kazan: Georesources, 2008. - № 3 . - p . 30-34 . - ISSN 1608-5043 .

மேற்கோள்கள்[தொகு]

• Belkovich O.I. Planet of my father . 1001.ru (May 13, 2005). Retrieved January 22, 2011. Archived May 12, 2012.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இகோர்_பெல்கோவிச்&oldid=2691468" இருந்து மீள்விக்கப்பட்டது