இகோர் எஃபிமோவ்
| இகோர் எஃபிமோவ் | |
|---|---|
Efimov in 2014 ஆம் ஆண்டில் எபிமோவ் | |
| நாடு | இத்தாலி (2007 வரை) மொனாக்கோ (2007 முதல்) |
| பிறப்பு | செப்டம்பர் 16, 1960 திபிலீசி |
| பட்டம் | பேராதன் (1992) |
| உச்சத் தரவுகோள் | 2540 (சூலை 1997) |
இகோர் எஃபிமோவ் (Igor Efimov) சியார்சியா நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீரராவார். 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று சியார்சியா நாட்டின் திபிலீசி நகரத்தில் பிறந்தார். பிடே அமைப்பு 1992 ஆம் ஆண்டு இகோர் எஃபிமோவிற்கு சதுரங்க கிராண்ட்மாசுட்டர் என்ற பட்டத்தை வழங்கியது. 2007 ஆம் ஆண்டு வரை இவர் இத்தாலி நாட்டுக்காக விளையாடினார். 2007 ஆம் ஆண்டு முதல் மொனாக்கோ நாட்டிற்காக விளையாடுகிறார். இகோர் போரிசோவிச் எஃபிமோவ் என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1997 ஆம் ஆண்டில் இவரது பிடே தரப் புள்ளிகள் உச்சநிலையில் 2540 ஆக இருந்தது.
சதுரங்க வாழ்க்கை
[தொகு]1997 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இத்தாலிய சதுரங்க வாகையாளர் போட்டியை வென்றார்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மொனாக்கோ சதுரங்க வாகையாளர் போட்டியை வென்றார். அங்கு இவர் இகோர் பெரிசோவ்சுகியுடன் முதல் இடத்தைப் பிடித்தார். ஆனால் சமநிலை முறிவு ஆட்டங்களில் வெற்றி பெற்றார்.[1]
2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, இவர் டேவிட் மார்சியானோவுடன் இணைந்து மொனாக்கோவில் உள்ள இரண்டு கிராண்ட்மாசுட்டர்களில் ஒருவராக இருந்தார்.[2]
2024 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் எந்த தோல்வியும் இல்லாமல் 8/9 என்ற புள்ளிகள் கணக்கில் ஐரோப்பிய சிறு நாடுகளின் தனிநபர் சதுரங்க வாகையாளர் போட்டியை வென்றார். மேலும், பிரெட் பெரெண்ட்டு மற்றும் செர்னி ரிபெரா வேகன்சோன்சை முந்தினார்.[3]
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 45 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் மொனாக்கோவுக்காக விளையாடினார். அந்த நிகழ்வில், டேனியல் குவிசானால் தோற்கடிக்கப்பட்டார். இவர்களின் ஆட்டத்திற்குப் பிறகு தேனியல் குவிசான் கிராண்ட்மாசுட்டரானார்.[4]
இகோர் எஃபிமோவ் 2025 சதுரங்க உலகக் கோப்பையில் விளையாடினார், அங்கு முதல் சுற்றில் எடிசு குரெலால் தோற்கடிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IGOR EFIMOV AND SVETLANA BEREZOWSKA NEW MONACO CHAMPIONS". February 20, 2017.
- ↑ "World Statistics Day - Chess Touch". October 20, 2020.
- ↑ "GM IGOR EFIMOV AND WGM ELVIRA BEREND WIN EUROPEAN SMALL NATIONS CHESS CHAMPIONSHIPS 2024". June 30, 2024.
- ↑ Malanum, Jean (September 15, 2024). "Quizon earns GM title at Chess Olympiad; PH teams in 13th spot".
வெளி இணைப்புகள்
[தொகு]- இகோர் எஃபிமோவ் rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு