உள்ளடக்கத்துக்குச் செல்

இகிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இகிகை / இக்கிகய்

இகிகை / இக்கிகை / இக்கிகய் ( Ikigai ) என்பது "வாழ்வதற்கான ஒரு காரணம்" அல்லது "இருப்பதற்கான ஒரு காரணம்" என பொருள்படும் ஒரு ஜப்பானிய தத்துவம்[1]. ஒரு தனிமனிதனின் வாழ்வில் எதை அர்த்தமுள்ளதாக கருதுகிறான், எது அவனுக்கு இன்பத்தையும் திருப்தியையும் தருகிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வார்த்தை ஜப்பானிய மொழியில் இகி (வாழ்க்கை) மற்றும் கை (விளைவு) என்ற இரண்டு சொற்களின் கலவையாகும். அவை சேர்ந்து "வாழ்வதற்கான ஒரு காரணம்" என்ற பொருளைத் தருகிறது.

அந்த நான்கு கூறுகளாவன:

  • எதை விரும்புகிறோமோ அது
  • எதில் திறமை உள்ளதோ அது
  • உலகிற்கு என்ன தேவைப்படுகிறதோ அது
  • எதற்கு வருமானம் / வெகுமதி பெற முடியுமோ அது

இகிகை என்பது ஒரு நபர் தன் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறிவதற்கான வழி என்று விளக்கப்படுகிறது. இதற்கான ஒரு பிரபலமான விளக்கப்படம், நான்கு வெவ்வேறு கூறுகள் ஒன்றுடன் ஒன்று சேரும் ஒரு வென் படம் ஆகும்.

இந்த நான்கு கூறுகளும் சந்திக்கும் இடம் தான் இகிகை என்று கூறப்படுகிறது. ஜப்பானிய உளவியலாளர் கத்ஸுயா இனோவோவின் கூற்றுப்படி, இகிகையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: சமூக, சமூகமற்ற மற்றும் சமூக விரோத இகிகை.

இந்த கருத்து முதலில் ஜப்பானிய மனநல மருத்துவர் மியெகோ கமியாவின் 1966 ஆம் ஆண்டு புத்தகமான "வாழ்வின் அர்த்தம்" என்பதன் மூலம் பிரபலமானது. மேலும், ஆய்வுகள் இகிகை இல்லாதவர்களுக்கும் இதய நோய்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், புற்றுநோய்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இகிகை கொண்டிருப்பது வாழ்நாளை நீட்டிக்க உதவும் என்று கூறப்படுகிறது. ஒக்கினாவா தீவில் வாழும் மக்களின் நீண்ட ஆயுளுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் அங்குள்ள மக்கள் ஓய்வு பெறுவதை விரும்பாமல், தங்களுக்கு பிடித்த வேலையை ஆரோக்கியமாக இருக்கும் வரை தொடர்கிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Y., Kotera; G., Kaluzeviciute; Gulcan, Garip; Kirsten, McEwan; Katy, Chamberlain (2021). "Health Benefits of Ikigai: A Review of Literature". Concurrent Disorders Society Publishing. https://repository.derby.ac.uk/item/92qzv/health-benefits-of-ikigai-a-review-of-literature. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இகிகை&oldid=4369572" இலிருந்து மீள்விக்கப்பட்டது