இஃபாத் அரா
ஷம்சன் நஹர் இஃபாத் அரா (Shamsun Nahar Iffat Ara வங்காள மொழி: (ইফ্ফাত আরা ), இஃபாத் அரா என்று பொதுவாக அழைக்கப்படும் இவர் ஒரு எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வங்களாதேசத்தின் இலக்கிய அமைப்பாளர் ஆவார். 1950 களின் பிற்பகுதியில் ஆசாத் உள்ளிட்ட நாட்டின் முன்னணி செய்தித்தாளில் சிறுகதைகள் எழுதி வெளியிடத் தொடங்கியபோது அவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. இவரின் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து எழுத்துப் பணியினை மேற்கொண்டு வருகிறார்.
வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]இஃபாத் அரா 1939 இல் மைமென்சிங் நகரில் மலவி குவாசி அப்துல் ஹக்கீம் மற்றும் மொசம்மத் ஹஜெரா கத்துன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். பள்ளிகளில் சென்று கல்வி கற்பதற்காக இவர் கடுமையாகப் போராடினார். முதலில் குர்ஆனைப் படிக்க அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். பின்னர் அவர் ஆரம்பக் கல்விக்காக முஸ்லிம் பெண்கள் பள்ளிக்குச் சென்றார். அவளுடைய ஆரம்பக் கல்வி முடிந்ததும் அவரை உயர்கல்வி பயில இவரின் தந்தை முயற்சிக்கவில்லை. அந்த நேரத்தில், சிறுமிகளுக்கான உயர் கல்வி என்பது அவசியம் என்பது குறித்தான விழிப்புணர்வு இல்லை.[1] கல்வியைத் தொடர தனது பெற்றோர் அனுமதிக்கவில்லை எனில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார், பின்னர் வித்யாமோய் அரசு மகளிர் உயர்நிலப் பள்ளியில் இவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிப்பதற்குள், இளம் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான அப்துல் லத்தீப் தாலுக்தர் என்பவரை மணந்தார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே இவர் மெட்ரிகுலேசன் தேர்வினை எழுதினார். பின்னர், அவர் முமினுனேசா மகளிர் கல்லூரியில் தேர்ச்சி பெற்றார் . 1966 ஆம் ஆண்டில் அவர் அதே கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பி. எட் பட்டம் படிக்கத் தொடங்கினார்.பின்பு அனந்த மோகன் கல்லூரியில் பெங்காலி மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார்
ஆளுமை மற்றும் தத்துவம்
[தொகு]இவருக்கு தனது பணியே வாழ்க்கை. அவரின் வழ்க்கையே அவரின் பணி என்று வாழ்ந்தார்.இவர் பெண் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதில் தெளிவான குறிக்கோளைக் கொண்டிருந்தார். ஆனால் திருமணம் என்பது பெண்களின் சுதந்திரத்தினைப் பாதிக்காது என்ற கருத்தினையும் கொண்டிருந்தார்.இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் இசுலாம் மதம் இசுலாம் பெண்கள் நவீன வாழ்க்கையில் வாழ்வதற்கு துணை நிற்கவில்லை எனக் கருதினார். மைமென்சிங் நகரில் உள்ள அவரது இல்லத்தில், இளம் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியத் தொழிலாளர்களை ஊக்கப் படுத்துதல், தோட்டக்கலை போன்றவற்றின் மூலம் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டார்.
சமூக பணிகள்
[தொகு]இவர் 1966 ஆம் ஆண்டில் அனைத்து பாகிஸ்தான் பெண்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் பெண்களுக்கான சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1971 இல் வங்காளதேசம் உருவான பிறகு இவர் எழுத்தாளர் ஹெலினா கான், சூஃபியா கரீம் மற்றும் அரசியல்வாதி மரியம் ஹாஷிமுதீன் போன்றவர்களுடன் இணைந்து மஹிலா சமிதி எனும் அமைப்பினை உருவாக்கினார். 1988 ஆம் ஆண்டில் மைமென்சிங்கில் உதயன் உயர்நிலைப் பள்ளியை நிறுவுவதில் இவர் கணிசமான பங்களிப்பை வழங்கினார். தனது திருமணத்திற்குப் பிறகு பல அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் இவர் தீவிர அரசியலில் தற்போது வரை ஈடுபடவில்லை.
சான்றுகள்
[தொகு]- ↑ Islam, Aminul (1 February 2007). "Iffat Ara: Writing from the Margins". Archived from the original on 10 February 2007.