ஆ. பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. பத்மநாபன் (பிறப்பு 14-12-1928[1]) இந்திய ஆட்சிப்பணியாளருள் ஒருவர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநராகப் பதவிவகித்தவர். தமிழ்நாட்டுக்குத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆனந்தம் என்பவருக்கு 14-12-1928ஆம் நாள் பிறந்தவர். உடன்பிறந்தவர்கள் அறுவர்.[2] இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கலைஇளவர், கலைமுதுவர் பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சியடைந்த முதல் தலித்[2] இவரே ஆவார். 1940களில் முனைவர் அம்பேத்கர் சென்னைக்கு வந்திருந்தபொழுது அவரை மாணவராக இருந்த ஆ. பத்மநாபன் உரையாடியுள்ளார்.[3]

ஆற்றிய பணிகள்[தொகு]

இவர் இந்திய ஆட்சிப்பணியாளராக 1956 மே 1ஆம் நாள் 1988 சூன் 30ஆம் நாள் வரை 32 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார்[1]. அவற்றுள் சில:

  • சார் ஆட்சியராக சேரன்மாதேவி.[4], திருச்சி[2] ஆகிய இடங்களில் பணியாற்றினார்.
  • சேலம் மாவட்ட ஆட்சியராக 8-5-1963ஆம் நாள் முதல் 12-4-1965ஆம் நாள் வரை பணியாற்றினார்.[5] and [6]
  • தமிழ்நாட்டரசின் தொழிலாளர் மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக 03.09.1968ஆம் நாள் முதல் 05.07.1969 [7] வரை பணியாற்றினார்.
  • தமிழ்நாடு அரசு தொழில்வளர்ச்சிக் கழகத்திற்குத் (TIDCO) தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது அந்நிறுவனத்தை ஸ்பிக்கின் பங்குதாராக மாற்றினார்.
  • தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத் (SIPCOT) தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாகக் காரணமாக இருந்தார்.
  • தமிழ்நாடு தலைமைச்செயலாளர்

ஆளுநர்[தொகு]

ஆ. பத்மநாபன் 1998 மே 2ஆம் நாள் முதல் 2000 நவம்பர் 30ஆம் நாள் வரை மிசோரம் மாநில ஆளுநராகப் பதவிவகித்தார்.[8]

எழுத்தாளர்[தொகு]

இவர் பல்வேறு நூல்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதியிருக்கிறார்.[9][10] அவற்றுள் சில:

வ.எண் ஆண்டு நூல் வகை பதிப்பகம் குறிப்பு
01 1960 The mechanical properties and metallography of an age-hardening aluminium base alloy in the form of plate Physics University of London (Battersea College of Technology) M.Sc.Dissertation[11]
02 1986 Light a candle English Poem Poompuhar Pathippagam, Madras.
03 1986 Saint Nandanaar Poompuhr Pathippagam, Madras.
04 1986 Rain-drop English Poem Poompuhar Pathippagam, 63, Broadway, Madras-600 108[12]
05 1988 Saint Chokhamela Biography Poompuhar Pathippagam, Madras.
06 1990 The Untouchable's journey Poompuhar Pathippagam, Madras.
07 1992 சமத்துவம் நாடிய சான்றோர் வரலாறு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. இ.பதி.2009
08 1993 Mandal Commission judgement and the scheduled castes and scheduled tribes New Delhi : Indian Social Institute[13]
09 1993 My Dream Poems Poompuhar Pathippagam, Madras[14]
10 1996 Dalits at the cross-roads : their struggle, past and present Poompuhar Pathippagam, Madras.
11 2000 தலித்துகளின் இன்றைய நிலைமை: குழப்பமும் தடுமாற்றமும் - அவர்களின் முந்தைய தற்போதைய போராட்டம் பூம்புகார் பதிப்பகம், சென்னை.[15] இ.பதி. 2002
12 2000 Speeches, messages, press release and important letters of H.E. Shri A. Padmanaban, Governor, Mizoram Aizawl : Printed at the Mizoram Government Press [16]
13 2001 My days and times Autobiography Poompuhar Pathippagam, Chennai[17]
14 2002 எனது எண்ண அலைகள்: நாளைய வளமான இந்தியா கட்டுரைகள் சுரா பதிப்பகம், அண்ணாநகர், சென்னை

வகித்த பொறுப்புகள்[தொகு]

  • பகுத்தறிவாளர் கழகத்தில் துணைத்தலைவராகப் பொறுப்புவகித்தார்.[18]
  • 1989 ஏப்ரல் 17ஆம் நாள் முதல் 1993 திசம்பர் 13ஆம் நாள் வரை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) உறுப்பினராகப் பொறுப்புவகித்தார்.
  • புதுதில்லியிலுள்ள கல்வி மேன்மைக்கும் அணுக்கலுக்குமான நிறுவ (Foundation For Academic Excellence and Access - FAEA) ஆட்சிக்குழு உறுப்பினர்.
  • தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்ற பொழுது 1988 சனவரி 30ஆம் நாள் முதல் 1989 சனவரி 27ஆம் நாள் வரை இவர் ஆளுநருக்கு ஆலோசகராகப் பொறுப்புவகித்தார்.[19]

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஆ. பத்மநாபனின் வாழ்க்கை வரலாற்றை பசுபதி தனராஜ் என்பவர் தொகுத்து "ஆ.பத்மநாபன் -ஆளுமையின் அரிய பரிமாணம்" என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.[20]

அவர் வாழ்க்கை

https://drive.google.com/file/d/1Px6LmxG_4GmRqu8FCZiqC8qAZ1T1cHIy/view?usp=sharing

அவர் எழுதிய நூல்

https://drive.google.com/file/d/1RVMplGbrBYjPn5sRDeEORfiYbFqROC-V/view?usp=sharing

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Indian Administrative Service, Tamilnadu: Retired Officers List
  2. 2.0 2.1 2.2 முனைவர் மா.கி.ரமணன்
  3. "விடுதலை, 14 டிசம்பர் 2017". Archived from the original on 2019-08-03. பார்க்கப்பட்ட நாள் 2019-08-03.
  4. "A family of two winners". தி இந்து. 17 January 2000 இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110154319/http://www.hindu.com/thehindu/2000/01/17/stories/13171288.htm. பார்த்த நாள்: 17 May 2012. 
  5. "Salem - District Collectors". SouthIndianStates.com. Archived from the original on 2 April 2012. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
  6. Salem District Official website
  7. "Government of Tamil Nadu - Department of Employment and Training website". Archived from the original on 2015-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-08-03.
  8. Former Governors and Lt.Governors of Mizoram
  9. Padmanabhan, A. "Book Released" பரணிடப்பட்டது 2013-03-03 at the வந்தவழி இயந்திரம், தி இந்து, Chennai, 16 December 2001. Retrieved on 16 December 2001.
  10. Books By Padmanaban, A. "Books", worldcat identities, Chennai, 11 October 2012. Retrieved on 11 October 2012.
  11. [1]
  12. [2]
  13. [3]
  14. [4]
  15. [5]
  16. [6]
  17. [7]
  18. "விடுதலை, 14 டிசம்பர் 2017". Archived from the original on 2019-08-03. பார்க்கப்பட்ட நாள் 2019-08-03.
  19. முத்துகுமார் ஆர்.; தமிழக அரசியல் வரலாறு - பாகம் 2; சென்னை கிழக்குப்பதிப்பகம்
  20. ஆ.பத்மநாபன் -ஆளுமையின் அரிய பரிமாணம் நூலுக்கான மதிப்புரை, முனைவர் மா.கி.ரமணன், தினமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._பத்மநாபன்&oldid=3855497" இலிருந்து மீள்விக்கப்பட்டது