ஆ. நடராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேரூர் ஆ. நடராசன் (A. Natarasan) என்பவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியும், தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977, [1] 1984, [2] 1989 [3] மற்றும் 1996 [4] தேர்தல்களில் பேரூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,(2001) போட்டியிட திமுக வேட்பாளராக இவர் நியமனம் செய்யப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.[6] இவர் 2017 சூன் 13 அன்று மாரடைப்பால் காலமானார். [7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._நடராசன்&oldid=3019525" இருந்து மீள்விக்கப்பட்டது