ஆ. சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆ. சந்திரசேகரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் 25 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்லூரியின் துணை முதல்வர், முதல்வர் பொறுப்புகளையும் வகித்திருக்கிறார். தமிழக நிலச் சட்டங்கள், ஓர் இந்துப் பெண்ணின் சட்ட உரிமைகள் உட்பட ஏழு தமிழ் நூல்களையும் ஆங்கில நூல்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "அறிவுசார் சொத்துரிமைச் சட்டம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._சந்திரசேகரன்&oldid=3293879" இருந்து மீள்விக்கப்பட்டது